தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் வழிபாட்டுத்தலங்களுக்குப் பெயர் போனது. இங்கு ஆடித்தபசு கண்கொள்ளாக் காட்சி. அந்தத் திருவிழாவுக்குக் கூட்டம் அலைமோதும். இங்குள்ள இறைவன், இறைவியான சங்கரநாராயணர்- கோமதி அம்மாள் தரிசனம் செய்வது சிறப்பு. சித்தர்கள் அருளிய இந்த ஆலயத்தின் வழிபாடு ரகசியம்.ஒன்றை சொல்லி இருக்கிறார்கள். அது என்னன்னு பாருங்க.
ஸ்ரீகோமதி அம்மன் – மதுரை மீனாட்சியம்மனின் சகோதரியாகக் கருதப் படுகிறாள். ஸ்ரீகோமதி அம்மனை தரிசிக்கச் செல்லுமுன்பாக,மதுரை- ஸ்ரீமீனாட்சியை தரிசித்து ‘உன் சகோதரியை காணச் செல்கிறேன். எனக்கு நல்லருள் புரிவாய்!’ என்று வழிபட்டுச் செல்வதுடன் கோமதியம்மனை தரிசித்த பின்னர், மீண்டும் மதுரைக்குச் சென்று மீனாட்சியம்மனிடம், ‘உன் சகோதரியை நன்றாக தரிசித்தேன், நன்றி!’ என்றும் கூறி வழிபட வேண்டும் என்பது அநேகம் பேருக்கு தெரியத சித்தர்கள் அருளிய இந்த ஆலயத்தின் வழிபாடு வழிபாட்டு ரகசியமாகும்
இந்த சங்கரன் கோவில் பாண்டிய நாட்டின் பஞ்ச பூத தலங்களில் மண் தலமாக இருப்பதால் ரியல்எஸ்டேட் தொழில் செய்பவர்கள் பலர் இங்கு வந்து இறைவனை தரிசித்து தங்களது தொழில் விருத்தியடைய வேண்டி செல்கின்றனர்.
இந்த சங்கரநாராயணரை வணங்கினால் வீடுகளில் விசப்பூச்சிகள், பல்லி, பாம்பு இவற்றினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.. சங்கரன்கோவிலில் அன்னையான கோமதிக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிப்பாடு செய்வது சிறப்பு. இங்கு பிறந்த குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கும் சடங்கைச் செய்கிறார்கள்.
மேலும்,வேண்டுதல் நிமித்தம் செவ்வரளி மலர்களைப் பரப்பி அதன் நடுவே இரட்டை தீபங்கள் ஏற்றி வைத்தும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள். சிவாலய வழக்கப்படி விபூதி, விஷ்ணு கோயில் வழக்கப்படி தீர்த்தம் ஆகிய இரண்டும் வழங்கப்படும் திருக்கோயில் இது மட்டுமே.
அர்த்த ஜாம பூஜை முடிந்து சந்நிதியில் வழங்கப்படும் பிரசாதப் பாலை, தொடர்ந்து 30 நாட்கள் பருகி வந்தால், மகப்பேறு கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கை. இந்தக் கோயிலில் வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு நாகராஜர் சந்நிதி. இங்கு பாம்பு புற்று உள்ளது. அதைச் சுற்றி கோயில் எழுப்பி இருக்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நாகராஜருக்கு பழம், பால் ஆகியவை படைக்கிறார்கள்.
அம்மன் சந்நிதி பிராகாரத்தின் வாயு மூலையில் புற்று மண் பிரசாதம் சேமிக்கப்பட்டுள்ளது. இது, சகல தோல் நோய்கள் மற்றும் விஷக் கடிகளுக்கு சிறந்த மருந்து. இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்து நெற்றியில் சந்தனம் போல் இட்டு, குங்குமம் அணிந்தால் கெடு பலன் குறையும். நிம்மதி பெருகும்.
ஒரு முறை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மன்னன் பூலித்தேவன் இந்தப் புற்று மண்ணை பிரசாதமாக உண்டு நோய் நீங்கப் பெற்றாராம்.