சனி பகவான்னா யார்? அவருக்கு இவ்ளோ சிறப்புகளா?!

சனியன் பிடிச்சது, ஏழரைன்னு சனிபகவானை மனதில் வைத்து சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் திட்டுவார்கள். நாமே பல முறை இதைப் பார்த்திருப்போம். ஏழரை நாட்டுச்சனி பிடிச்சி ஆட்டுது. அதான் பயபுள்ள லூசு மாதிரி திரியறான்னும் சொல்வாங்க.…

sanipagavan

சனியன் பிடிச்சது, ஏழரைன்னு சனிபகவானை மனதில் வைத்து சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் திட்டுவார்கள். நாமே பல முறை இதைப் பார்த்திருப்போம். ஏழரை நாட்டுச்சனி பிடிச்சி ஆட்டுது. அதான் பயபுள்ள லூசு மாதிரி திரியறான்னும் சொல்வாங்க. ஆனா சனிபகவான் யார்? அவருக்கு என்னென்ன சிறப்புகள் உள்ளதுன்னு பார்க்கலாமா…

சனிக்கிழமை கோவிலில் போய்ப் பார்த்தால் சனி பகவானுக்கு சிறப்பு பூஜை நடக்கும். அவரது வாகனம் காகம். சனி பகவானுக்கு கருப்பு நிற ஆடையையே அணிவிப்பர். அவருக்கு எள் தீபம் ஏற்றுவர். இப்படி எல்லாமே கருப்புதான்.

சனீசுவரனுக்கும் கருமை நிறத்திற்குமான குறியீடு கவனத்தில் கொள்ளத்தக்கது. கோயில்களில் சனீசுவரனுக்கு கருமை நிற ஆடையும், கரிய எள்ளை முடிந்த கரிய துணியை திரியாக கொண்ட விளக்குகளும் கொடுக்கப்படுகின்றன. இவற்றோடு சனீசுவரனின் வாகனமாக கருதப்படும் காகமும் கருமை நிறமுடையது. இவ்வாறு பல்வேறு பட்ட குறியீடுகள் கருமை நிறம் கொண்டவையாக உள்ளன.

இவை இருள் சூழ்ந்த பாதாள உலகத்தினைக் குறிப்பதாகவும் கருத இடமுண்டு. கிரகங்களில் சேவகனான இவர், மனித உடலில் நரம்பு ஆவார். தொடை, பாதம், கணுக்கால் இவற்றின் சொந்தக்காரர். பஞ்சபூதங்களில்- காற்று. ஊழியர்களைப் பிரதிபலிப்பவர். பாப கிரக வரிசையில் முதலிடம் வகிப்பவர். லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு.

3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், சரளமான பணவருவாய், பெயர்-புகழ் மற்றும் அரசியல் செல்வாக்கு கிடைக்கும். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.