சனிப்பிரதோஷத்திற்கு இவ்ளோ விசேஷங்கள் உள்ளதா?

Published:

நம் வினைகளைத் தீர்க்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது தான் சனிப்பிரதோஷம். அபிஷேக ஆராதனைகளைச் செய்கையில் நாம் நம் வினைகளில் இருந்து மீண்டு வரலாம். சிலர் காலையில் இருந்து மாலை வரை விரதம் இருப்பார்கள்.

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ நேரம். சிலர் ஆலயத்திற்கு உழவாரப் பணி செய்து இறைவனை அடைவார்கள். இந்த நாளில் உழவாரப் பணி செய்வது என்பது ரொம்பவே விசேஷம்.

இந்நன்னாளில் காராம்பசுவின் கறந்த பால் கொண்டு சிவபெருமான், நந்தி பகவான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டு வரவேண்டும். இப்படி செய்தால் பூர்வ ஜென்ம கர்ம வினைகள், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும்.

பிரதோஷ தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்ததும் நெற்றி நிறைய திருநீறு அணிந்து ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து நாம் விரதத்தைத் தொடங்கலாம்.

சிவபெருமானின் விரத வழிபாடுகளில் மிக முக்கியமானது பிரதோஷ வழிபாடு. பிரதோஷம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிர என்றால் விசேஷம். தோஷம் என்றால் நாமறிந்ததே. விசேஷமான தோஷங்கள் என்னவெல்லாம் இருக்கிறதோ அவற்றையும் போக்கக்கூடிய அருமையான தோஷம்.

Pradosha Pooja
Pradosha Pooja

தேவர்கள் நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு இவற்றால் துன்பப்பட்டாங்க. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களாகவே யோசித்து பாற்கடலை கடையலாம். அதிலிருந்து வரும் அமிர்தத்தைப் பருகலாம் என்று நினைத்து அதேபோல் செய்தார்கள். அப்போது வந்தது அமிர்தமல்ல. விஷம்.

அவர்கள் கடைசியாக வேறுவழியில்லாமல் பெருமானிடம் முறையிடுகிறாங்க. பெருமானே நாங்க ஒரு விவசாயம் செய்தோம். பாற்கடலை கடைந்தோம். அதில் முதலில் விளைந்தது தங்களுக்கே என்றார்கள்.

அப்படி முதலில் விளைந்த விஷத்தை எடுத்து சிவபெருமான் தொண்டையில அடக்கி வைத்துக் கொண்டார். இனி நீங்கள் போய் பாற்கடலை கடைங்க என்று சொன்னார். இப்போ அமிர்தத்தைப் போய் கடைந்து எடுத்து சாப்பிட்டாங்க.

பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த விஷத்தை சுந்தரரை அனுப்பி தான் சிவபெருமான் எடுத்து வரச் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எடுத்து வந்த விஷத்தைத் தனது கண்டத்தில் வைத்து நிறுத்தியபடியால் அவர் நீலகண்டர் ஆனார்.

அதற்குப் பிறகு தேவர்கள் மறந்து விட்டனர். அதன்பிறகு தான் அதற்காக விரதமிருந்து கடவுளுக்கு பாலாபிஷேகம் என எல்லா அபிஷேகங்களையும் செய்து வழிபட்ட நாள் தான் பிரதோஷம்.

தேவர்கள் சிவபெருமானை எப்படி வழிபட்டனர் என்பதைத் தான் சோமசூத்ர பிரதட்சணம் விளக்குகிறது. இதைக் கீழ்க்கண்ட படத்தில் காணலாம். இதில் அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்ட வழியில் தான் நாம் பிரதோஷ நேரங்களில் சுற்றி வர வேண்டும்.

Prathosham
Prathosham ways

பிரதோஷ நாளன்று சிவபெருமான் நந்தியின் இரு காதுகளுக்கு இடையில் தான் ஆரோகனம் செய்து இருப்பார்.

பிரதோஷ விரதம் இருப்பதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்று பார்த்தால் முக்கியமாக கடன் தீரும். பிறவிக்கடனும் தீரும். இதன்படி நாம் வழிபாடு பண்ணி விட்டு அங்குள்ள அடியார்கள் சிலருக்கு ஏதாவது ஒரு பிரசாதம் நைவேத்தியம் பண்ணிவிட்டு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

சிவபெருமானின் கருணையை அப்போது பரிபூரணமாக பெற முடியும். குழந்தைகளின் கல்வி நலனுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், நல்ல உயரிய தலைமைப் பண்பு, தலைமைப் பதவி கிடைப்பதற்காகவும், சிவபதம் கிடைக்கவும், நல்ல அடியாராய் வாழ்வதற்காகவும் இந்த பிரதோஷ விரதத்தை மேற்கொள்ளலாம்.

பிரதோஷமானது பல வகைப்படும். பிரதோஷம், மாத பிரதோஷம், மகாபிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று உள்ளது. இவற்றில் மகாபிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம். இன்று (05.11.2022) வருகிறது.

இது இந்த ஆண்டின் கடைசி சனிப்பிரதோஷம். அதனால் அனைவரும் கோவிலுக்குச் சென்று இறையருள் பெறுக.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment