துணிவு படத்தில் பாடல் பாடிய அனிருத்! அஜித்தின் சில்லா! சில்லா! இனி டிரெண்டிங்!

Published:

அஜித் வலிமை படத்தை தொடர்ந்து துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து மிகப் பெரும் பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் முழுமையான நெகட்டிவ் ரோலில் அஜித் நடித்து வருகிறார்

ரஜினி படத்தில் இணைந்த இளம் ஹீரோயின் ! யாரு தெரியுமா?

அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகஉள்ளது இப்படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

aji 611

சமீபத்தில் நடிகர் அஜித் தனது டப்பிங் வேலைகளை முடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மேலும் கூடுதல் தகவலாக துணிவு படத்தின் பாடல் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது

துணிவு படத்திற்காக கலத்தில் இறங்கிய அஜித்! டப்பிங் பணியை முடித்ததாக தகவல்!

முன்னணி இசையமைப்பாளராகிய அனிருத் அஜித்தின் துணிவு படத்தில் தமன் இசையில் சில்லா சில்லா பாடலை பாடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment