கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?

By Sankar Velu

Published:

கந்த சஷ்டியின் 6வது நாள் 7.11.2024 அன்று வியாழக்கிழமை வருகிறது. இந்த ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பது எப்படின்னு பார்க்கலாம்.

ஆரோக்கியமாக உள்ளவர்கள் காலை முதல் பட்டினி விரதம் இருங்க. முடியாதவர்கள் எளிமையாக பாலும், பழமும் எடுக்கலாம். முருகரோட திருவுருவப்படத்தை எடுத்துக்கிட்டு நல்ல மலர்கள் சாற்றி சந்தன, குங்குமம் வைத்துக்கொள்ளுங்கள். பால், பழம் வைத்து நைவேத்தியம் வைத்துக் கொள்ளுங்கள். அதே போல ஆறு சற்கோண தீபம் ஏற்றுங்க. இன்று தான் 6 விளக்கு ஏற்றுவோம்.

‘சரவணபவ’ என்ற மந்திரத்தில் நிறைவு பண்ணி வ என்ற எழுத்தில் தீபம் வைக்க வேண்டும். இந்த 6வது நாள் மிக மிக முக்கியமான நாள். கூட்டத்துல போகப் போறோம்னா தண்ணீர் நல்லா குடிங்க. ஒருநாள் விரதம் இருப்பவர்களும் சரி. 6 நாள் விரதம் இருப்பவர்களும் இந்த நாளில் மாலையில் தான் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் மாலை 4.30 மணிக்கு மேல் சம்ஹார நேரமாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதனால் 4.30க்கு மேல் நேரத்தைத் திட்டமிட்டுக்கோங்க. சம்ஹாரம் நிறைவானதற்குப் பிறகு தான் நைவேத்தியம் வைக்க வேண்டும். பால், பழம் வச்சி நைவேத்தியம் பண்ணலாம். இல்லன்னா 6 வகையான சாதம் பண்ணலாம்.

சர்க்கரைப்பொங்கல், புளிசாதம், தயிர்சாதம், எலுமிச்சம்பழ சாதம், புளிசாதம், கற்கண்டு சாதம் வைத்துக் கொள்ளலாம். இது முடியாது என்பவர்கள் சர்க்கரைப் பொங்கல் மட்டும் வைத்துக் கொள்ளலாம். சூரசம்ஹாரம் முடிந்ததற்குப் பிறகு கண்டிப்பாகக் குளிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக இதைக் கடைபிடிக்க வேண்டும். டிவியிலோ, நேரிலோ சூரசம்ஹாரம் பாருங்க. சூரனின் தலை விழுந்ததும் குளிக்கப் போயிடலாம்.

அதன்பிறகு மறுபடியும் சற்கோணதீபம் ஏற்றி, நைவேத்தியம் பண்ணுங்க. பிற ஊரில் காலதாமதமாக சூரசம்ஹாரம் நடந்தால் அதைப் பார்ப்பவர்கள் முடிந்ததும் கண்டிப்பாகக் குளிக்க வேண்டும். அதன்பிறகு தான் நைவேத்தியம் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். பால் காய்ச்சி, நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் போட்டு அதைத் தானம் செய்யலாம்.

சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் தானம் செய்யலாம். சம்ஹாரம் முடிந்ததும் விரதம் இருப்பவர்கள் பிரசாதம் சாப்பிடலாம். ஆனால் விரதம் பூர்த்தி பண்ணுவது 7வது நாள் தான். ஒருநாள் விரதம் இருப்பவர்கள் சம்ஹாரம் முடிந்ததுமே பூர்த்தி செய்து கொள்ளலாம். தானம் பண்ணுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். திருப்புகழ் பாராயணம் பண்ணலாம். முருகனின் வேல்பட்டு சூரன் அழிந்தான்.

சேவலும், மயிலுமாக அழிந்தான். அதனால் முருகனிடம் எனது பிரச்சனைகளைப் போக்கி நல்ல அருளைக் கொடுன்னு வேண்டி வழிபடலாம். ஒருநாள் விரதம் இருப்பவர்கள் எதற்காக விரதம் இருக்கிறீர்களோ அதற்கான திருப்புகழைப் பாராயணம் செய்யுங்க. கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும்னா இந்த 6 நாளும் விரதம் இருந்து சம்ஹாரம் பண்ற காட்சியைக் கண்ணாரப் பாருங்க.

நம் மனதிலும் இப்படித்தான் ஆணவம் தலைதூக்கிக்கொண்டே இருக்கு. நான் தான் பெரியவன்னு நினைக்கிறாங்க. அதனால் முருகனை நினைக்க நினைக்க நான் என்ற அகங்காரம் ஒழிந்துவிடும். முருகப்பெருமானை என்ன நினைச்சி வழிபடுகிறீர்களோ அத்தனைக்கும் அவர் செவிசாய்ப்பார். 6வது நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை வழிபாடு செய்யலாம்.

தானம் செய்வதற்கான நேரம் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு பண்ணலாம். ஒரு பொழுது உள்ளன்போடு சஷ்டி நேரத்துல முருகனை வேண்டினால் நிச்சயம் பலன் கிடைக்கும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.