இதைச் செய்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் வறுமை வராது…! அள்ள அள்ளக் குறையாத தானியம்…வந்து சேரும்!

Published:

நாம உழைக்கிறதே இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தான். ஒரு சிலர் அன்றாடம் சாப்பிட ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் ரோட்டில் பிச்சை எடுத்துத் திரிவதை நாம் பார்த்திருப்போம். முடிந்தால் நம்மாலான உதவிகளைச் செய்வோம்.

அது அவர்கள் விதி என்று நாம் அவர்களைக் கடந்து செல்வோம். ஆனால் இந்த பசிக்கொடுமை உலகிலேயே மிகவும் கொடிய நோய். இந்த நோய் மட்டும் யாருக்கும் வரக்கூடாது என்று நாம் இறைவனை வேண்டிக் கொள்வோம். இந்த நிலை நமக்கும் நமது ஏழேழு ஜென்மத்திற்கும் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போமா…

பூஜை அறையில் அன்னபூரணிக்கு போடும் அரிசியை என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தவறியும் இதை மட்டும் செய்து விடாதீர்கள் தீராத வறுமை உண்டாகிவிடும்.

பூஜை அறையில் அன்னபூரணி படம் வைத்திருப்பது மிகவும் நல்லது என்பார்கள். அன்னபூரணி அள்ள அள்ள குறையாத தன தானியத்தை வழங்குபவள். கட்டாயம் அனைவருடைய வீட்டிலும் அன்னபூரணியின் படம் அல்லது சிறிய அளவிலான சிலை வைத்து இருந்தால் வறுமை இல்லாத வாழ்வு அமையும் என்பது சாஸ்திர நியதி.

Annapoorani 1
Annapoorani

இந்த அன்னபூரணிக்கு தினந்தோறும் அரிசி போடுவது வழக்கம். அந்த அரிசியை என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பார்க்கலாம்.

ஒருவரிடம் பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் உண்ண உணவு இல்லை என்றாலோ அந்த வீட்டில் பஞ்சம் பட்டினி இருந்தாலோ தான் அவன் உண்மையிலேயே பரம ஏழையாக உலகிற்கு தெரிகிறான். கோடி கோடியாக பணம் வைத்திருந்தாலும் வறுமையுடன் வாடிய ஒருவரைக் கண்டால் நாம் விலகி தான் செல்கிறோம். பணத்திற்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றாலும் பணம் வேறு வறுமை வேறு என்பது தான் நிதர்சனமான உண்மை.

பணத்தால் எதையும் வாங்கி விட முடியும் தான். ஆனால் சரியான நேரத்திற்கு தேவைப்படுவது உணவு மட்டுமே. பணம் இல்லை என்றாலும் உயிர் வாழ முடியும். உணவு இல்லை என்றால் உயிர் வாழ முடியுமா? அத்தகைய உணவினை கொடுக்கும் அன்னபூரணி தாயை தினம் தோறும் வணங்கி வந்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் வறுமை இல்லா வாழ்வு நிலைக்கும் என்கிறது புராணங்கள்.

அன்னபூரணியின் படம் வைத்திருப்பவர்கள் அதற்கு கீழே சிறிய தாம்பூல தட்டில் அரிசியை பரப்பி வைத்து அருகில் தண்ணீர் வைக்கலாம். அன்னபூரணி படம் இல்லாதவர்கள் அதனை சிறிய அளவிலான வெண்கல பித்தளை அல்லது செம்பு ஆகிய உலோகங்களில் விக்கிரகங்களை வாங்கி வைப்பது உண்டு.

அப்படி நீங்கள் விக்ரஹங்களை வாங்கி வைக்கும் பொழுது கையில் ஏந்தியிருக்கும் அன்னபூரணியின் கரண்டியிலும் அன்னபூரணி அமர்ந்திருக்கும் சிறிய அளவிலான தட்டிலும் அரிசியை போட்டு வைப்பது முறையாகும்.

எப்பொழுதும் அன்னபூரணி விக்ரஹத்தை தரையில் வைக்கக்கூடாது. ஒரு சிறிய அளவிலான தட்டு வைத்து அதில் அரிசியைப் பரப்பி அதன் மீது தான் அன்னபூரணியை அமர வைக்க வேண்டும். கையில் ஏந்தியிருக்கும் கரண்டியிலும் ஒன்றிரண்டு அரிசியை போட வேண்டும். மறுமுறை நீங்கள் பூஜை செய்யும் பொழுது அந்த அரிசியை மாற்றி புதிய அரிசியை தான் நீங்கள் வைக்க வேண்டும் என்பதை மட்டும் எப்போதும் மறந்து விடாதீர்கள்.

அப்படி நீங்கள் மாற்றும் அரிசியை கட்டாயம் குப்பையில் போட கூடாது. கொஞ்சம் தானே அரிசி இருக்கிறது என்று நினைத்து குப்பையில் வீசுவது அல்லது சமையலறை சிங்கிள் கொட்டி தண்ணீரை ஊற்றுவது போன்ற செயல்களை கட்டாயம் செய்து வீணடிக்கக் கூடாது. இது மென்மேலும் உங்களுக்கு வறுமையை கொண்டு வந்து சேர்த்து விடும்.அன்னபூரணிக்கு வைத்த அரிசியை தனியே ஒரு பாத்திரத்தில் சேகரித்து வாருங்கள்.

Rice flour Kolam
Rice flour Kolam

அது ஓரளவுக்கு நிறைய நிரம்பிய பின் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த அரிசியை கொண்டு உங்களுடைய வீட்டின் வாசலில் கோலம் போடுவது மற்றும் பூஜை அறையில் கோலம் போடுவது போன்றவற்றை செய்யும் பொழுது நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடைய ஏழு சந்ததியினரும் வறுமை இல்லாமல் வளமாக வாழ்வார்கள்.

மேலும் உங்களுக்காக...