வாழ்வில் சகலவிதமான கஷ்டங்களையும் நீக்கி வளம் கொடுக்கும் அஷ்டதிக்கு தெய்வங்கள்…!!!

By Sankar Velu

Published:

திசைகள் எட்டு என்பது நமக்குத் தெரியும். ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு என்பது தெரியுமா? அந்த சக்திகளை நாம் அஷ்டதிக்கு தெய்வங்கள் என்று அழைத்து வருகிறோம். அந்த சக்திகள் பற்றியும் அவற்றின் சிறப்பம்சம் குறித்தும் இப்போது பார்க்கலாம்.

கிழக்கு திசைக்கு பிராம்மி, தென்கிழக்கு திசைக்கு கௌமாரி, தெற்கு திசைக்கு வராகி, தென்மேற்கு திசைக்கு சியாமளா, மேற்கு திசைக்கு வைஷ்ணவி, வடமேற்கு திசைக்கு இந்திராணி, வடக்கு திசைக்கு சாமுண்டி, வடகிழக்கு திசைக்கு மகேஸ்வரி என்ற வகையில் திசைக்கு ஒரு தெய்வமாக இருந்து நமக்கு அருள்புரிகின்றனர்.

பிராம்மி

Brahmi devi
Brahmi devi

பிரம்ம தேவரின் அம்சமும் சக்தி வடிவம் தான். இவள் பிராம்மி என்று அழைக்கப்படுகிறாள். கிழக்கு திசையின் சக்தி வடிவம். பிராமி சக்தியை வணங்குவதால் குழந்தைப் பேறும், கலை ஞானமும் உண்டாகும்.

கௌமாரி

சரவணனின் அம்சமாக அவதரித்தவள் கௌமாரி என்று அழைக்கப்படுகிறாள். தென் கிழக்கு திசையின் சக்தி வடிவம். கௌமாரி தேவியை வழிபடுவதால் பதவி உயர்வும் மனதில் இருக்கும். பயமும் அகலும்.

வராகி

விஷ்ணுவின் அவதாரமான வராக மூர்த்தியின் அம்சமாக இருப்பவர் வராகி. தெற்கு திசையின் சக்தி வடிவம். வரரி தேவியை வணங்கி வருவதால் எதிரிகளை அழித்து வெற்றி பெறலாம். மனதில் தைரியம் பிறக்கும்.

சியாமளா

Shyamala devi
Shyamala devi

மீனாட்சி அம்மனின் அவதாரமாக திகழ்பவள் சியாமளா தேவி. தென் மேற்கு திசையின் சக்தி வடிவம். சியாமளா தேவியை வழிபடுவதால் சகல கலைகளிலும் தேர்ச்சி மற்றும் அறிவுக்கூர்மை உண்டாகும்.

வைஷ்ணவி

விஷ்ணுவின் அம்சமாக தோன்றியவர். நாராயணி என்றும் அழைக்கப்படுபவள். மேற்கு திசையின் சக்தி வடிவம். வைஷ்ணவி வழிபடுவதால் உடல் ஆரோக்கியமும் எண்ணங்களில் மேன்மையும் உண்டாகும்.

இந்திராணி

தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் அம்சமாக தோன்றியவர் இந்திராணி. வடமேற்கு திசையின் சக்தி வடிவம். இந்திராணியை வழிபடுவதால் நல்ல வாழ்க்கைத் துணை அமைத்து தருவார். பணத்தட்டுபாடு குறையும்.

சாமுண்டி

Samundi devi
Samundi devi

ருத்ரனின் அம்சமாக தோன்றியவர் சாமுண்டி தேவி. எந்த விதமான சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதவர். வடக்கு திசையின் சக்தி வடிவம். சாமுண்டியை வணங்கி வருவதால் எடுத்த செயலில் எவ்விதமான இன்னலுக்கும் இடமின்றி வெற்றியும், பாதுகாப்பும் உண்டாகும்.

மகேஸ்வரி

சிவபெருமானின் அம்சமாக திகழக்கூடியவர் மகேஸ்வரி. வடகிழக்கு திசையின் சக்தி வடிவம். மகேஸ்வரியை வழிபடுவதால் மனதில் இருந்து வந்த ஐயங்கள் மற்றும் கோபம் நீங்கும். சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடியவர்.

இவ்விதம் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் அஷ்டதிக்கு சக்திகளை வாழ்நாளில் அனுதினமும் வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் உள்ள எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கி வளமும், சிறப்பும் பெறலாம்.

மேலும் உங்களுக்காக...