பொன், பொருள் சேரணும். ஆயுள் விருத்தியா இருக்கணும் அப்படிங்கறதுதான் எல்லாருடைய ஆசையாக இருக்கும். இதற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கி வழிபடுவர். விரதம் இருப்பர். நேர்த்திக் கடன் செய்வர். அதெல்லாம் தப்பில்லை. அதே நேரம் இன்னொரு விஷயத்தையும் தெரிந்து கொள்வோம்.
நாம் கண்ணுக்குத் தெரியாத கடவுளை உணர்வுகளின் மூலம் வழிபடுகிறோம். இறைவனின் படைப்பு தான் அண்டசராசரமும் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் சந்திரனும் ஒன்று. சந்திரனை வழிபடுவதால் நமக்குப் பலவிதமான நன்மைகள் உண்டாகின்றன. குறிப்பாக செல்வம் சேரும். ஆயுள் விருத்தியாகும். இது எப்படி நடக்கிறதுன்னு பார்க்கலாமா…
பொன், பொருளை நமக்கு அள்ளித்தருகிறது மூன்றாம் பிறை தரிசனம். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சந்திரனுக்கும், ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. அவர்கள் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் ஆயுள் தோஷத்தை போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.
காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே, மாலை வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.
நீண்ட ஆயுள் வேணும். பிள்ளை குட்டிகளை எல்லாம் நல்லா படிக்க வைக்கணும். கல்யாணம் முடிச்சிக் கொடுத்து பேரன் பேத்தி எடுக்கணும்கறது தான் பெரும்பாலானோரின் ஆசையா இருக்கும். ஆனா அதுக்கான வேலையை நாம செய்தால் நிச்சயம் அந்தப் பலன் உண்டு. இனியாவது செய்வோமா சந்திர தரிசனம்..!