இதுவரை இல்லாத செல்வசெழிப்பு வேண்டுமா? இன்று இப்படி செய்யுங்க..!

Published:

வரலட்சுமி நோன்பு ஆடி மாத கடைசி நாள் இன்று (16.08.2024) தான். ஒரு மாதத்தின் முதல் நாளில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணுமோ அதே போல் கடைசி நாளையும் அனுசரிக்க வேண்டும். இன்று காலை 6.41 ஏகாதசி மணிக்கு முடியுது.

ஜோதிட சாஸ்திரப்படி காலையில் உள்ள திதி தான் அன்று நாள் முழுவதும் உள்ள திதின்னு சொல்வாங்க. இன்று நிலைவாசலில் செய்யக்கூடிய பூஜை குறித்தும், பெண்கள் குளிக்கும் தண்ணீரில் சேர்க்கும் பொருள் பற்றியும் பார்ப்போம்.

நிலைவாசலைத் தாண்டித்தான் நன்மையும், தீமையும் உள்ளே வரும். காத்து நிற்கும் கடவுளான நமது குலதெய்வம் வசிக்கும் இடமும் இதுதான். அதனால் அந்த இடத்தை பூஜை அறை மாதிரி சுத்தம் பண்ண வேண்டும். செவ்வாய், வெள்ளியன்று சுத்தம் செய்தாலே போதும்.

சொம்பு, டம்ளர், பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். இதுக்கு வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியாகவும், பணவசியத்தை ஏற்படுத்தும் தன்மையும் உண்டு. அடுத்து மகாலட்சுமிக்குப் பிரியமான பொருளான மஞ்சள் தூளை எடுங்க.

vn
vn

மஞ்சளைத் தண்ணீர் அல்லது பன்னீர் கலந்து பேஸ்ட் மாதிரி எடுங்க. அடுத்து சுத்தமான தண்ணீரை சொம்புல பிடிச்சி வைங்க. ஊதுவச்சி குச்சியை எடுத்து மஞ்சள் கலந்த பேஸ்டை எடுத்து பிரியாணி இலையில் ஸ்ரீம்னு எழுதினா போதும்.

அதன்பிறகு இதை அப்படியே அந்தத் தண்ணீரில் போடுங்க. அப்புறம் அந்த பேஸ்டையும் தண்ணீரில் போடுங்க. அது அழிந்தாலும் பரவாயில்லை. எழுதுவது தான் முக்கியம். இந்தத் தண்ணீரை வைத்து நிலைவாசலை சுத்தம் செய்யுங்க.

பிரியாணி இலையைக் கால் படாத இடத்தில் போட்டுடுங்க. அதன்பிறகு மஞ்சள், குங்குமம் இடலாம். மஞ்சள் தூளில் பன்னீர், ஜவ்வாது சேர்ப்பது நல்ல பலன் தரும். மண் அகல்விளக்கு நிலைவாசலின் இருபுறமும் ஏத்துங்க. ஊதுவத்தி ஏத்துங்க. பூக்கள் வைங்க.

சாதாரணமாக பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று குளிக்கும் தண்ணீரில் நறுமணம் மிகுந்த பொருள்களைக் கலந்து குளிப்பது தீர்க்க சுமங்கலி யோகத்தையும், நேர்மறை சக்தியையும் தரும். குளிக்கிறதுக்கு ஒரு பக்கெட்ல தண்ணீரைப் பிடித்து வைங்க. அதுல ஒரு ஸ்பூன் கல் உப்பு போட்டுக்கோங்க.

அது மகாலட்சுமி தாயாருக்குப் பிரியமானது. அடுத்து மஞ்சள் தூள் சேர்த்துக் குளிக்கணும். அடுத்து தேன் தேவை. இது மகாலட்சுமிக்குப் பிடித்தமான பொருள். இதையும் ஒரு அரை ஸ்பூன் பக்கெட் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். தேன் இல்லாதவர்கள் துளசி இலை அல்லது பச்சைக்கற்பூரத்தையோ சேர்த்துக்கலாம்.

இந்தத் தண்ணீரை பூஜை செய்யும் பெண்கள் மட்டும் குளித்தால் போதும். அதன்பிறகு நிலைவாசலை சுத்தம் செய்து விட்டு மகாலட்சுமி தாயாருக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்யுங்கள். இது வரை இல்லாத செல்வ செழிப்பு உண்டாகும்.

 

மேலும் உங்களுக்காக...