பங்குச்சந்தையில் பொறுமை அவசியம்.. லட்சங்கள் நிச்சயம் கோடி ஆகும்..!

Published:

 

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் இன்று முதலீடு செய்து, நாளையே லாபம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் முதலீடு செய்த பணத்தையும் இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும். பங்குச்சந்தையில் பொறுமை அவசியம் எவ்வாறு பொறுமையுடன் காத்திருந்தால் நிச்சயம் ஆயிரம் லட்சமாகும், லட்சம் கோடி ஆகும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு புது சேலை வாங்கினால், ஒரு சினிமா பார்த்தால் செலவாகும் என்ற நினைப்பில் பங்குச் சந்தையில் முதலில் செய்ய வேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு எந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை கூடுதலாக ஆய்வு செய்ய வேண்டும். ஒரு நல்ல நிறுவனத்தில் முதலீடு செய்தால் அந்த நிறுவனத்தின் பங்குகள் குறைந்தாலும் பதட்டம் அடையாமல் குறைந்த போது அதை கூடுதலாக வாங்கிக் கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பங்குச்சந்தையின் விதிமுறைகளை சரியாக கடைபிடித்து பொறுமையாக காத்திருந்தால் நிச்சயம் நாம் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்த பணம் லட்சமாக மாறும் என்றும் லட்சக்கணக்கில் முதலீடு செய்த பணம் கோடியாக மாறும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்போது நம்மை கேலி கிண்டல் செய்பவர்கள் இருப்பார்கள், பங்குச்சந்தை என்பது மோசடி அதில் பணம் சம்பாதிக்க முடியாது என்று தவறான அறிவுரை கூறுபவர்களை கண்டு கொள்ளக் கூடாது. நம்பிக்கையுடன் நல்ல நிறுவனத்தில் முதலீடு செய்து தேவையான காலம் காத்திருந்தால் நிச்சயம் பங்குச்சந்தையில் வாரன் பஃபெட் போல் அனைவரும் முன்னேறலாம் என்பதை மறந்து விடக்கூடாது.

சேமிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். எவ்வளவு தான் ஓடி ஓடி கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் அன்றாட தேவைகளை மட்டும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதும், சேமிப்பதை நல்ல முதலீடாக மாற்றுவதும் தான் ஒரு சாதாரண மனிதன் பணக்காரன் ஆவதற்கு ஒரே வழி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...