நம் வீட்டில் மிக முக்கியமான அறை என்றால் அது பூஜை அறைதான். எப்போதும் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் அங்குள்ள பாத்;திரங்களின் சுத்தம் மிக மிக முக்கியம்.
பூஜை சாமான்களை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஆனால் பித்தளை மற்றும் செம்பு பூஜை சாமான்கள் காலப்போக்கில் கறை படிந்து மங்கிப் போகலாம். அப்படி கருத்துப் போன பூஜை சாமான்களை சுத்தம் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்.
முதலில் பூஜை சாமான்களில் இருக்கும் பாசிகளை காட்டன் துணி அல்லது பேப்பர் வைத்து துடைத்து எடுக்க வேண்டும்.. பின்பு திருநீறு அல்லது கோலப்பொடி சேர்த்து துடைக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, கல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சூடாக்க வேண்டும்..
தண்ணீர் சூடானதும், அரை ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஷாம்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.. பூஜை பொருட்கள் அனைத்தையும் வெதுவெதுப்பான நீரில் போட்டு 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.. இறுதியாக, அவற்றை வெளியே எடுக்க வேண்டும்..
பூஜை பாத்திரங்கள் பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் ஆனவை. இவை காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து ஆக்சிஜனேற்றம் அடைவதால் மங்கலாகி, கறைகள் படுகின்றன.
எனவே அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம், கறைகள் கெட்டிப்படாமல் தடுக்கலாம். இது சுத்தம் செய்யும் பணியை எளிதாக்கும். அதிக கறைகள் படிந்திருந்தால், எலுமிச்சை சாறுடன் சிறிது சமையல் சோடாவையும் சேர்த்து பயன்படுத்தலாம். இது கறைகளை நீக்க மேலும் உதவும்.
சுத்தம் செய்த பாத்திரங்களை ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைப்பதன் மூலம், அவை மீண்டும் கறை பிடிப்பதை தாமதப்படுத்தலாம். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் பூஜை பாத்திரங்களை புதியது போல பளபளப்பாக வைத்திருக்க முடியும்.