நாட்டின் பாதுகாப்பை விட உலக அழகி போட்டி முக்கியமா? தெலுங்கானா முதல்வருக்கு ஒரு கேள்வி..!

  தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சமீபத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பேசியதற்கும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தெலுங்கானா தலைவர் என்வி சுபாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தெலுங்கானா…

miss world

 

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சமீபத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பேசியதற்கும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தெலுங்கானா தலைவர் என்வி சுபாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒரு கற்பனை உலகில் வாழ்கிறாரா? தனது கட்சித் தலைமை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியிடம் பேரன்பு பெறும் நோக்கத்தால் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் வெளியிடுகிறார் என்பது எனக்கு தெரிகிறது,” என்று சுபாஷ் விமர்சித்தார்.

மேலும், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்த ரெட்டியின் கருத்துக்கள் பாகிஸ்தானின் பிரச்சாரத்துடன் ஒத்துப்போகின்றது என்றும் கூறினார். “கடுமையான பாஜக விமர்சகரான ஏஐஎம்ஐஎம் தலைவன் ஆசாதுதீன் ஓவைசி கூட பாகிஸ்தானின் பொய்கள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தெலுங்கானாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச அழகி போட்டியான ‘மிஸ் வேர்ல்டு’ நிகழ்வுக்கு தான் அவர் முக்கியத்துவம் தருகிறார். நாட்டின் பாதுகாப்பு பிரச்சனைகளை விட அழகி போட்டியை அவர் முக்கியமாக கருதுகிறார் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் ராகுல் காந்தி நாட்டின் அடுத்த பிரதமராக மாறுவார் என்ற ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு “அவருடைய கட்சி உறுப்பினர்களே சிரிப்பார்கள்” என்று கிண்டல் செய்தார்.

முன்னதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான ஒப்பந்தத்தை கேள்விக்குறியாக்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி மோடி அரசு போரை நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்து கட்சிகளையும் கலந்தாலோசிக்காமல் போர் நிறுத்த ஒப்பந்தம் வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் மோடி பழைய ரூபாய் நாணயம் போலவானவர். இன்று, இந்த நாட்டுக்கு ராகுல் காந்தியின் தலைமை தேவை. மேலும் பாகிஸ்தானால் எத்தனை ரபேல் விமானங்கள் விழுந்தன என்பது குறித்து விளக்கம் கோரினார்.

“ராகுல் காந்தி பிரதமராக இருந்தால், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, காளி மாதாவின் பாதையில் நடந்து, பாகிஸ்தானை இரண்டு பகுதிகளாக பிரித்திருப்பார் என்ரு கூறிய ரெட்டி, காங்கிரசும் காந்தி குடும்பமும் நாட்டுக்காக தங்கள் உயிர்களை பலமுறை தியாகம் செய்தவர்களாக உள்ளனர் என்றும், ராகுல் காந்தி பிரதமர் ஆகும் வரை கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்ரும் கூறினார்.