ஆடி மாதம் முதல் நாளில் என்ன செய்வதுன்னு தெரியுமா? இப்பவே இப்படி வழிபடுங்க…!

Published:

ஆடி மாதம் முழுவதும் நமக்குப் பண்டிகை காலம் தான். ஊரெங்கும் திருவிழா தான். அம்பாள், சிவன், பெருமாள் கோவில்கள் எங்கும் விசேஷம் தான். கிராமங்களில் ஆடிப்பண்டிகை விசேஷமாகக் கொண்டாடப்படும். இன்று தான் அந்த ஆடி மாதம் பிறந்துள்ளது.

முதல் நாளான இன்று நாம் எப்படி இறைவழிபாட்டை மேற்கொள்வது என்று பார்ப்போம்.

இன்று நம் வீட்டை சுத்தம் செய்து குலதெய்வத்தை அழைக்கலாம். பூஜை அறையை சுத்தம் செய்து சந்தனம், குங்குமத்தை எல்லா சாமி படங்களுக்கும் வையுங்கள். நிலை வாசலைத் துடைத்து விட்டு மஞ்சள், குங்குமத்தை வைக்க மறந்துடாதீங்க.

வாசலில் மாவிலையுடன் சேர்த்து, வேப்பிலையையும் தோரணமாகக் கட்டலாம். நோய் தொற்றுகள் வராமல் இருக்க இது ஒரு மருத்துவமாக இருக்கும் என்றே நம் முன்னோர்கள் வழிவழியாகக் கடைபிடிக்கிறாங்க.

குலதெய்வம் யாரென தெரியாதவர்கள் அம்பாளை, அன்னை காமாட்சியையே குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம். இந்த ஆடி மாத முதல் நாளில் நம் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த ஆடி மாதத்தில் நாங்கள் செய்கின்ற எல்லா வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டு அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற ‘நீ எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று முதல் பிரார்த்தனையை வைக்க வேண்டும்.

சிறிய கலசம், சந்தனம், குங்குமம், விபூதி வைத்து மஞ்சள் நூலால் முகப்பில் சுற்றுங்க. அதில் நீர் வைக்கலாம். அரிசி வைத்தும் கலசம் வைக்கலாம். நீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொள்வது நல்லது.

Ambaal
Ambaal

நீர் நிரப்பினால் மஞ்சள், வாசனைத்திரவியப் பொடி, 1 ரூபாய் நாணயம், எலுமிச்சம்பழம், ஒரு கொத்து மாவிலை, வேப்பிலை, மஞ்சளிட்டு குங்குமம் பூசிய தேங்காய் இவ்வளவு தான் கலசம்.

இதை நமது குலதெய்வமாகப் பாவித்து அம்மா நீ எங்க வீட்டுக்கு வந்து எழுந்தருளி எங்கள் பூஜையை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு அனுக்கிரகம் பண்ணனும்னு வழிபடலாம். இன்று (17.7.2024) அன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த வழிபாடு செய்யலாம்.

இன்று நாம் அருகில் உள்ள அம்மன் கோவில்களுக்கும் சென்று மனமுருக பிரார்த்தனை செய்து வழிபடலாம். நம் அருகிலேயே காவல் தெய்வம், எல்லை தெய்வம் இருக்கும். அங்கு போய் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

வீட்டிலேயே வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு, சர்க்கரைப் பொங்கல், பருப்பு பாயாசம் என ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக செய்து வீட்டிலேயே அம்பாளை வழிபட்டு ஆடிமாதத்தை சிறப்பாகக் கொண்டாடலாம்.

 

மேலும் உங்களுக்காக...