5 மணி நேர விமான பயணத்தில் சாப்பாடு, தண்ணீர் எடுத்து கொள்ளாத பயணி கைது.. என்ன காரணம்?

By Bala Siva

Published:

விமான பயணி ஒருவர் ஐந்து மணி நேரமாக சாப்பாடு மற்றும் தண்ணீர் எடுத்துக் கொள்ள மறுத்ததை அடுத்து அவரை சந்தேகம் அடைந்த விமான பணிப்பெண்கள் கேப்டனிடம் கூறிய நிலையில் கேப்டன் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சவுதி அரேபியாவிலிருந்து டெல்லி வந்த ஒரு பயணி நேரமான ஐந்து மணி நேர பயணத்தில் சாப்பாடு தண்ணீர் என எதுவும் வேண்டாம் எனக் கூறியது விமான பணிப்பெண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் கேப்டனிடம் புகார் அளிக்க அந்த பயணியை விமான பணிப்பெண்கள் மறைமுகமாக கண்காணித்தனர்.

இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் இறங்கியதும் கேப்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பயணியை நெருக்கமாக கண்காணித்த நிலையில் ஒரு கட்டத்தில் அவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவரிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியதை அடுத்து அவர் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கத்தை விழுங்கி உள்ளதாக தெரியவந்தது. சின்ன சின்ன மாத்திரைகளாக தங்கத்தை மாற்றி அதனை அவர் விழுங்கி உள்ளதாகவும் அவரது வயிற்றில் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 5 மணி நேர விமான பயணத்தில் ஒருமுறை கூட அவர் தண்ணீர் மற்றும் சாப்பாடு எடுத்துக் கொள்ளாததால் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர் பிடிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.