ஆணவத்தால் அழிந்த மகிஷாசூரன்… துர்க்கை உருவான விதம்!

துர்க்கை என்றாலே வீரம். ஒரு ஆற்றல். உள்ளுக்குள்ள ஏதோ தைரியம் வந்தது மாதிரி உணர்வு. இத்தனைக்கும் சொந்தமாக விளங்கக்கூடிய அந்தத் தெய்வம் எதற்காக பூலோகத்துல இப்படி ஒரு கோலத்துல நமக்காக எழுந்தருளினாள் என்று பார்ப்போமா……

துர்க்கை என்றாலே வீரம். ஒரு ஆற்றல். உள்ளுக்குள்ள ஏதோ தைரியம் வந்தது மாதிரி உணர்வு. இத்தனைக்கும் சொந்தமாக விளங்கக்கூடிய அந்தத் தெய்வம் எதற்காக பூலோகத்துல இப்படி ஒரு கோலத்துல நமக்காக எழுந்தருளினாள் என்று பார்ப்போமா…

மகிஷன் என்ற ஒரு அரக்கன் வரம் வாங்க நினைத்து மிகப்பெரிய வரம் வாங்கி விட்டான். எந்த ஆண்சக்தியாலும் என்னை அழிக்க முடியாது என்பதுதான். மும்மூர்த்திகளாலும் ஒண்ணும் செய்ய முடியல. எந்த ஆண் சக்தியாலும் அழிக்க முடியாது என ஏன் வரம் வாங்கினான்?

பெண் சக்தியால் எல்லாம் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு நினைத்தான். அப்படி ஒரு ஆணவம் அவனுக்கு. மும்மூர்த்திகள், தேவர்கள் எல்லாம் சிவனை சென்று பார்த்தனர். என்னில் சரிபாதியானவள் அம்பாள். மகாலட்சுமி மார்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். பிரம்மாவின் நாவில் சரஸ்வதி வாசம் செய்கிறாள்.

இந்த தேவியரின் பெருமைகளைத் தெரியாத ஒருவன் நம்மை அழிக்கக்கூடாது என்று நினைத்தான் என்றால் அதுவே மிகப்பெரிய தவறு. அதனால் நாம யாரும் போய் சண்டை போட வேண்டாம். நமக்குள் இருக்குற சக்திகளை இணைத்தாலே போதும்.

அவன் அழிந்து விடுவான். அம்பாள் ஒரு அற்புத சக்தியாக தோன்றுகிறாள். 3 தெய்வங்களின் வடிவமாக 3 சக்திகளின் வடிவமாக இருக்கும் அந்த சக்தியை ஒரே ரூபமாக மாற்றி இன்னும் என்னென்ன பெண் சக்திகள் இருக்குதோ அத்தனையையும் ஒன்றிணைத்து அம்பாள் பராக்கிரமாக தோன்றுகிறாள்.

அதுதான் துர்க்கா தேவி. இந்த கோலத்தில் வந்த அம்பிகை மகிஷனை வதம் செய்வதற்கென்றே வந்தாள். அதே போல அவனை வதம் செய்தாள். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.