பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிந்தால் இவ்வளவு நன்மைகளா…? ஜோதிட சாஸ்திரம் கூறுவது என்ன…

By Meena

Published:

பெண்களின் அழகுக்கு மேலும் அழகு ஊட்டுவது வளையல், கம்மல், பொட்டு, கொலுசு, மெட்டி போன்றவை ஆகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ட்ரெண்டிங் மற்றும் ஃபேஷன் என்று சொல்லிக் கொண்டு வளையல் பொட்டு எதுவுமே வைக்காமல் பெண்கள் இருக்கின்றனர். ஆனால் அப்படி இருக்கவே கூடாது என்று கூறுகிறது ஜோதிட சாஸ்திரம். பெண்களுக்கு வளையல் எவ்வளவு முக்கியமானது அதிலும் கண்ணாடி வளையல் அணிந்தால் என்னென்ன சிறப்பு என்பதை பற்றி இனி காண்போம்.

பொதுவாகவே பெண்கள் வளையல், பொட்டு, கொலுசு மெட்டி போன்றவைகளை அணிந்து கொண்டு தான் இருக்க வேண்டும். அப்போதுதான் நம் வீட்டில் ஸ்ரீதேவி வாசம் செய்வாள் என்று கூறப்படுகிறது. அப்படி அணியாமல் இருப்பது அமங்கலமாகவே கருதப்படுகிறது. தங்கம் வெள்ளி வளையல்களை விடவும் கண்ணாடி வளையல் அணிவதுதான் மிகவும் சிறப்பு.

ஏனென்றால் கண்ணாடி வளையல்களுக்கு எதிர்மறை ஆற்றல்களை தடுத்து நேர்மறை ஆற்றல்களை உள் இழுக்கும் தன்மை கொண்டது ஆகும். கண்ணாடி வளையல்கள் அணிவதால் ஏற்படும் ஒலியானது நல்லவைகளை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு என்ற நிகழ்ச்சியை நடத்தி கண்ணாடி வளையல் அணிவித்து இருக்கிறார்கள். அறிவியல் ரீதியாக பார்க்க போனாலும் இதற்கு பல நன்மைகள் உண்டு.

கண்ணாடி வளையல்கள் நம் மணிக்கட்டில் மோதி ஒலி எழுப்பும் போது அது பெண்களின் உடல் சோர்வு மற்றும் மனசோர்வை நீக்குகிறது. அந்த வளையலில் கண்ணாடி வளையல் இருந்து வரும் ஒலியானது வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு நல்லது என்பதாலே வளைகாப்பு என்ற நிகழ்ச்சியை நடத்தினர் நம் முன்னோர்கள். எப்போதுமே நம் முன்னோர்கள் அறிவியல் சார்ந்தவைகளை பக்தி மயமாக கூறி அதை மக்களை பின்பற்ற செய்துள்ளார்கள்.

அந்த வரிசையில் கண்ணாடி வளையல்கள் அணிவதும் பொருந்தும். ஒரு வீட்டில் ஒரு பெண் வளையல் அணியாமல் இருக்கிறார் என்றால் அவர் அந்த குடும்பத்தில் உள்ள கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு துன்பம் கொடுக்கும் எதிர்மறை சக்திகளை உள்ளிருக்கிறார் என்பதே அர்த்தம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆதலால் சுமங்கலிப் பெண்கள் கண்ணாடி வளையல்களை அன்றாடம் அணிவதன் மூலம் நேர்மறை ஆற்றல்கள் கிடைப்பதன் மூலம் நல்வாழ்வு கிட்டும்.

மேலும் உங்களுக்காக...