மனிதர்கள் வாழும் இடம் எப்பொழுதும் நல்ல எதிர்மறை சக்திகள் கொண்டு நிரம்பி இருக்க வேண்டும். அதாவது, நாம் வசிக்கும் வீடு சொந்த இடமாக இருந்தாலும் சரி, வாடகை இடமாக இருந்தாலும் சரி நல்ல அதிர்வலைகள் இருந்தால் மட்டுமே நாம் அங்கு நிம்மதியாக வாழ முடியும். அல்லது நம் வாழ்க்கையே ஒளி இழந்து காணப்படும்.
மேலும், நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு கிரக அமைப்புகள் ஒருபக்கம் காரணமாக இருந்தாலும், மறுபுறம் கட்டாயம் நாம் வசிக்கும் இடத்தின் வாஸ்துவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
வாஸ்து சரி இல்லை என்றால் நமக்கு நடக்கும் சில கெட்ட நேரங்கள் இன்னும் அதிவேகமாக செயல்பட்டு நமக்கு தீவிரமான தாக்கத்தை கொடுத்து விடுகிறது. அவ்வாறு சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்து நிம்மதியான சூழலில் வாழ கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து, எட்டு திசைகளையும் காத்து வருகின்ற அஷ்டதிக் பாலகர்களையும் மனதார வழிபாடு செய்யது வர நல்ல மாற்றத்தை காணலாம்.
அதாவது, 8 திசைகளையும் காத்து வருபவர்கள் இந்திரன், அக்னி, யமன், திருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர். அவரக்ளுக்கு உரிய வழிபாடும் பரிகாரமும் செய்தால் நாம் சந்திக்கும் இன்னல்கள் விலகும் என்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு வருடமும் 8 மாதம் வாஸ்து நாள் வருவதுண்டு. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி அன்றைய தினங்களில் நாம் மஞ்சள் அரைத்து, அதனை நிலை, கதவு, ஜன்னல் ஆகிய இடங்களில் வைத்து அதற்கு மேல் குங்குமம் வைக்க வேண்டும்.
இதை ஒவ்வொரு வாஸ்து தினத்திலும் சரியான வாஸ்து நேரத்தில் நாம் செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நமக்கு வஸ்துவால் உண்டாகும் பிரச்சனையும், தீய சக்திகளால் சந்திக்கும் இன்னல்களும் விலகுகிறது.
சிலரால் இந்த மாதங்களில் வரும் வாஸ்து நாளை தெரிந்து பரிகாரங்கள் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள், எட்டு திசைகளையும் காத்துநிற்கும்
இந்திரன், வருணன், அக்னி, யமன், நிருதி, வாயு, குபேரன், ஈசானன் ஆகிய பாலகர்களின் மந்திரங்கள் சொல்லி தினமும் காலையில் வழிபாடு செய்ய, அதன் ஆற்றல் எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும் நம் வீட்டிற்குள் வர விடாமல் தடுத்து காக்கிறது.