கர்மான்னா என்னன்னு யாருக்காவது தெரியுமா? அதுக்கு 9 விதிகள் இருக்காமே..!

Published:

நாம நல்லது தான செய்றோம். அப்புறம் எதுக்கு நம்மை வந்து ஆண்டவன் சோதிக்கிறான்னு சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். அதற்கு எல்லாம் கர்மா தான் என்பார் அருகில் உள்ள நண்பர். அவரவர் என்னென்ன செஞ்சிருக்காங்களோ அதுக்கு ஏற்ப தான் பலனும் கிடைக்கும். இது உண்மை தான்.

ஆனால் கர்மா என்றால் என்ன என்று கேட்டால் பலரும் பலவிதமான விளக்கங்களைப் பக்கம் பக்கமாக சொல்வார்கள். தான் தான் பெரிய ஞானி போலவே பேசுவார்கள். ஆனால் உண்மையிலேயே கர்மா என்றால் என்ன என்பதை சொல்லத் தெரியாது.

குரு ஒருவர் தம் சீடர்களிடம் கர்மா என்றால் என்னன்னு கேட்டார். அதற்கு சீடர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகச் சொன்னார்கள். சிலர் நமது உணர்வுகள் என்றார்கள்.

இன்னும் சிலர் நமது கடமைகள் என்றார்கள். ஒரு சிலரோ நமது செயல்கள் என்றார்கள். குருவோ தலையை ஆட்டியபடியே இல்லை என்றார். கர்மா என்பது நமது எண்ணங்களே என்றார்.

Guru seedar
Guru seedar

நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான நல்ல எண்ணங்களை வைத்து இருந்தால், அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறு ஏதேனும் ஒரு வழியில் சாதகமாகத் திரும்பி வரும்.

அதனால் நல்லதையே சிந்திப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். அந்தவகையில் இந்தக் கர்மாவானது 9 விதிகளைக் கொண்டுள்ளது. அவை இதுதான்.

இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எதைச் செய்தாலும் அது நமக்கே திரும்பி வந்து சேரும். வாழ்வில் எதுவும் அதுவாக நடப்பதில்லை. நமக்குத் தேவையானதை நாம் தான் நடத்திச் செல்ல வேண்டும்.

சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும். நம்மை நாம் மாற்றிக் கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும்.

நம் வாழ்வில் நிகழ்பவற்றிற்கு நாமே பொறுப்பு என்று உணர வேண்டும். நேற்று இன்று நாளை என இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது தான்.

ஒரு சமயத்தில் இருவேறு விஷயங்களை சிந்திக்க முடியாது. நம் நடத்தை நமது சிந்தனையையும், செயலையும் பிரதிபலிக்க வேண்டும். நம்முடைய முன்காலத்தையே நாம் பார்த்துக் கொண்டு இருந்தால் நம்முடைய நிகழ்காலம் நம்மை விட்டுப் போய் விடும்.

மேலும் உங்களுக்காக...