ஆற்றில் மூழ்கிய மகள்கள்.. உயிரை கொடுத்து காப்பாற்றி விட்டு.. தந்தை சொன்ன கடைசி வார்த்தை..

By Ajith V

Published:

என்ன தான் தாய் ஒரு சேயை கஷ்டப்பட்டு பெற்றெடுத்து, உறக்கம் தொலைத்து வளர்த்தாலும் ஒரு தந்தையின் அர்ப்பணிப்பு என்ன என்பது பற்றி பலரும் தெரிவிக்காமல் தான் இருக்கிறார்கள். எப்போதுமே ஒரு குழந்தையை வளர்க்க தாய் பட்ட கஷ்டங்களை பலர் கூறி வந்தாலும் அதன் பின்னர் அவர்கள் சமுதாயத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பதற்கு தந்தை செய்யும் விஷயங்களும் மிக முக்கியம்.

Unsung ஹீரோக்கள் என தந்தையை பலரும் தெரிவித்து வரும் சூழலில், பொதுவாக மகன்களை விட மகள்களிடம் தான் அதிக பாசமாக இருப்பார்கள். ஒரு மகனிடம் பெரிய அளவில் நேரடியாக பேசாத தந்தைகள் அதிகமாக இருக்க, மகளுடன் பேசாமல் இருக்கும் தந்தையை பார்ப்பதே மிக மிக அரிது.

அந்த அளவுக்கு தந்தை – மகள் பாசத்திற்கு என்றுமே முக்கிய இடம் இருக்க 3 மகள்களுக்காக ஒரு தகப்பன் செய்த தியாகம் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. Tennessee என்னும் பகுதியை சேர்ந்தவர் ஃப்ரெட் பெப்பர்மேன் (Fred Pepperman). இவர் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒலிவியா, கேத்தரின் உட்பட 4 மகள்களும் இருந்தனர்.

இதனிடையே, கடந்த 2019 ஆம் ஆண்டு ஃப்ரெட்டிற்கு 53 வயதாக இருந்த சமயத்தில், தனது 28 வது திருமண நாளை கொண்டாட மனைவி, மகள்கள் மற்றும் குடும்பத்தினருடன் பனாமா சிட்டிக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் அவரது இளைய மகளான கிரேஸ், ப்ளோரிடா கடற்கரையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவரை காப்பாற்றுவதற்காக மூத்த சகோதரிகளான ஒலிவியா மற்றும் கேத்தரின் ஆகிய இருவரும் கடலில் குதித்துள்ளனர். ஆனால் நிலைமை தலைகீழாக மாறி சகோதரிகள் 3 பேரும் நீருக்குள் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. கொண்டாட்டத்தை கழிக்க சென்ற இடத்தில் இப்படி நடந்ததை பார்த்த தந்தை ஃப்ரெட், அங்கிருந்த இரண்டு பேர் உதவியுடன் நீரில் குதித்து தங்களின் மகள்களை காப்பாற்றி உள்ளார்.

அப்போது மகள் கேத்தரின், ‘என்னை காப்பாற்றுங்கள் அப்பா’ என கத்தியுள்ளார். உடனடியாக, ‘நான் உன்னை காப்பாற்றி விட்டேன்’ என்றும் கூறியுள்ளார் ஃப்ரெட். இது தான் ஃப்ரெட் கடைசியாக பேசிய வார்த்தை. மகள்களை காப்பாற்ற போய் ஃப்ரெட் தண்ணீரில் மூழ்கி போனதாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை நீரில் இருந்து மீட்டு CPR செய்தும் பார்த்துள்ளனர்.

ஆனால், அது பலனளிக்காமல் போக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஒரு வேளை ஃப்ரெட் நீரில் குதிக்கவில்லை என்றால், அவரது 3 மகள்களும் உயிரிழந்திருப்பார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஒரு தந்தை 3 மகள்களுக்காக உயிரை தியாகம் செய்து ஐந்து ஆண்டுகள் ஆனாலும் படிப்பவர்கள் பலரை தற்போதும் கண்ணீர் விட வைத்து வருகிறது.

மேலும் உங்களுக்காக...