சிறுமிக்கு அலர்ட் கொடுத்த செல்ல நாய்! அப்படி என்ன நடந்திருக்கும்…

Published:

நம் வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பதை பலர் வழக்கமாக கொண்டிருப்பார்கள். அது இந்த விதமான விலங்குகளாகவும் இருக்கலாம். அதை அன்பாகவும் பாசமாகவும் வளர்ப்பார்கள். அதற்கு என தனி அறை தனி விதமான உணவு என அனைத்து வசதிகளையும் உண்டாக்கி கொடுப்பது உண்டு.

ஆனால் செல்ல பிராணியாகவும் வீட்டின் பாதுகாப்பிற்காகவும் நாம் வளர்க்கும் ஒரு செல்ல பிராணி தான் நாய். அந்த அளவிற்கு நாய் நமக்கு பாதுகாப்பையும் நம்பிக்கையும் தருவது வழக்கம், பொதுவாக நாய்களில் பல விதங்கள் உள்ளது அழகிற்காக வளர்க்கப்படும் நாய்கள் முதல் பாதுகாப்பிற்காகவும் கம்பீர தோற்றத்திற்காக வளர்க்கப்படும் நாய்களும் அதிகம்.

அதற்க்கு ஏற்ப நாய்களின் விலையும் அமையும் , அழகிற்காக விற்கப்படும் நாய்கள் தனி விலை பாதுகாப்பிற்காக விற்கப்படும் நாய்கள் தனி விலை , வெளிநாட்டு ரக நாய்கள் தானி விலை என சொல்லி கொண்டே போகலாம்.

பொதுவாக நாய்கள் அனைத்தும் நன்றி உள்ள பிராணிகள் என கூறுவார்கள். அந்த அளவிற்கு அதன் பாசம் புத்திடசாலி திறன் அதிகமாக இருக்கும். வளர்ப்பவர்கள் கால்களை குழந்தை போல சுற்றி வருவது தான் நாய்களின் குணம்.

இந்த நாய்களை அதிகம் மதிக்க பல காரணங்களும் உள்ளது. நாய்களுக்கு என பல தனி சிறப்புகள் உள்ளது. அதன் மோப்ப சக்தி வேகமாக ஓடும் திறன் , உற்று கவனிக்கும் தன்மை என பல சிறப்பம்சங்களை தன்னுடன் கொண்டுள்ளது தான் நாய்கள்.

இந்த நாய்கள் நம் வீடுகளில் இயக்கும் போது பல வேடிக்கையான விஷயங்கள் செய்வதுண்டு. அந்த வகையில் தற்போழுது சமூக வலை தளங்களில் இந்த செல்ல நாய் குழந்தையை காப்பாற்றும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு ஜெர்மன் செப்பட் நாய் படுத்து கொண்டிருக்கிறது. அதன் அருகில் அந்த வீட்டு சிறுமி வீட்டு பாடங்களை முடிக்காமல் டிவி பார்த்து கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் சிறுமியின்தந்தை வருவதை மோப்ப சக்தியில் முன்னதாக அறிந்த நாய் குழந்தைக்கு அலர்ட் கொடுக்கிறது.

நாமக்கல்லில் அதிசயம்! ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு..!!

அதை பிரிந்து கொண்ட சிறுமி உடனே டிவியை அனைத்து விட்டு வீட்டுப்பாடங்களை முடிப்பது போல இருக்கிறாள். சிறுமி மீது கொண்ட அதிக பாசமே அந்த நாயாய் குழந்தைக்கு உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

மேலும் உங்களுக்காக...