நாமக்கல்லில் அதிசயம்! ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு..!!

நாமக்கல்லில் ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற மாட்டை பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

பொதுவாகவே மாடுகளை பொறுத்தவரையில் ஒரு கன்றுகளை மட்டுமே ஈன்றும். ஆனால் சில நேரங்களில் ஒரு பசுவில் 2 கன்று பிறப்பது அரிதான நிகழ்வாக காணப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி.

அதிர்ச்சி! மாணவனை கொன்ற ஆசிரியர்.. கர்நாடகாவில் பயங்கரம்!!

இவருக்கு லோகாம்பாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் இந்த குடும்பம் 3 மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த சூழலில் தம்பதியினர் வளர்த்து வந்த மாடு ஒன்று 2 பெண் கன்றுகளை ஈன்றது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்த கன்று பசுவிற்கு 3-வது பிரசவம் என கூறப்படுகிறது. அதே சமயம் கன்றுகளுக்கு ராமாயி, லட்சுமியாயி என பெயர் வைத்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

25 சர்வதேச விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை – ஒன்றிய அரசு!!

மேலும், இத்தகைய நிகழ்வின் காரணமாக பொதுமக்கள் அனைவரும்  பசுவுடம் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.