குடும்பத்துடன் புது வீட்டிற்கு பூஜை போடும் ஜி.பி முத்து! டிரெண்டிங் வீடியோ !

Published:

செத்த பயலே.. நாரப்பயலே என்ற வார்த்தை மூலம் டிக்டாக்கில் மிகவும் பிரபலமடைந்தார் தான் ஜி.பி.முத்து.. இவர் சொந்தமாக யூ டியூப் சேனல் தொடங்கி பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் சேனலுக்கு சுமார் 9 லட்சத்திற்கும் மேல் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

சமீபத்தில் விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்தார்.
அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு வந்த வண்ணம் உள்ளது.

படங்களில் நடிப்பது படங்களுக்காக பல புரொமோஷன்களில் கலந்து கொள்வது என பல இடங்களில் பிஸியாகவும் நகைச்சியையாகவும் தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் ஜி.பி.முத்து.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர்தான் ஜி.பி.முத்து. சொந்தமாக தாச்சி பட்டரை வைத்து நடத்தி வருகிறார். திரைத்துறையில் முன்னேறி வரும் அவருக்கு அடுத்தடுத்து வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்களை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போழுது வளர்ந்து வரும் ஜி.பி.முத்து தனது குடும்பத்திற்காக பல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார். சமிபத்தில் ஜி.பி.முத்து கார் வாங்கியதாக செய்தி பரவலாக வந்தது.

சிறுமிக்கு அலர்ட் கொடுத்த செல்ல நாய்! அப்படி என்ன நடந்திருக்கும்…

அதை தொடர்ந்து தற்போழுது ஜி.பி.முத்து புது வீடு வாங்கி அதில் அவரது குடுமபத்துடன் அதற்க்கு பூஜை போடும் வீடியோ தற்போழுது வெளியாகி உள்ளது.

அதில் அவரது குடுமபத்தில் உள்ள உறுப்பினர்கள் குழந்தைகளுடன் பால் காச்சி மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

 

 

 

மேலும் உங்களுக்காக...