பணத்தைச் சேமிக்க இருக்கவே இருக்கு அற்புதமான 6 வழிகள்…! என்னென்னன்னு தெரியுமா?

ஒரு மனிதனுக்கு பணத்தைச் சரியாகக் கையாளத் தெரியாவிட்டால் லட்சுமி அந்த வீட்டை விட்டு சீக்கிரமாகவே வெளியேறி விடுகிறாள். நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதில் 5 இடங்களில் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.…

ஒரு மனிதனுக்கு பணத்தைச் சரியாகக் கையாளத் தெரியாவிட்டால் லட்சுமி அந்த வீட்டை விட்டு சீக்கிரமாகவே வெளியேறி விடுகிறாள். நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதில் 5 இடங்களில் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அப்போது பணம் கொஞ்சம் கொஞ்சமாக சேரத் தொடங்கும்.

இந்த 6 விஷயங்களில் பணத்தை செலவழிக்கக்கூடாது. சிறிய சேமிப்புகள் வரும்காலத்தில் பெரிய லாபமாக கிடைக்கும். அதே போலவே வீட்டிலும் லட்சுமியை சேமிக்க வேண்டும். முதலில் ஆடம்பரச் செலவைக் குறைக்க வேண்டும். இதுதான் ஏழ்மையில் ஆழ்த்துகிறது. கார், நகை, மொபைல் போன்கள், தேவையற்ற விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவது நமக்கு நஷ்டம் தான்.

இதனால் லாபம் இல்லை. பணக்காரர்களாக பணத்தை முதலீடு செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறரைப் பார்த்து எதையும் வாங்காதீர்கள். சலுகைகளில் இருந்து விலகி விடுங்கள். இது சந்தைப்படுத்துதலின் உத்தி. சந்தையில் 50 சதவீத தள்ளுபடியில் கடிகாரம் கிடைத்தால் நம் வீட்டில் இருந்தாலும் நாம் வாங்கி விடுகிறோம். இதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை.

நமக்கு தேவையே இல்லாத பொருளுக்காக லட்சுமியைச் செலவழிக்கக்கூடாது. அடுத்துக் கடன். இப்படி கடன் வாங்கி பெரிய பெரிய பொருள்களை வாங்குவது தவறு. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினாலும் அது செலவுதான். இதனால் நாம் ஏழ்மை நிலையிலேயே தான் இருப்போம்.

கடன் வாங்கி எந்தப் பொருளையும் வாங்காதீர். பணத்தைப் பணமாக மட்டுமே வைத்து செலவழிக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தாதீர். உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து செலவழித்தால் ஐயோ பணம் செலவாகிறதே என்று உணர்வீர்கள். போன் மூலம் பணம் செலுத்தும்போது அது கண்ணுக்குத் தெரியாததால் பெரிய சுமையாகவும் தோன்றாது.

ஒரு பொருள் வாங்கும்போது அது தேவையா என பாருங்கள். தேவையான பொருள்களை மட்டுமே வாங்க வேண்டும். ஒரு போதும் எந்த புதிய ஆசையையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள். பணவீக்கத்துக்கு மிகப்பெரிய காரணம் ஆசைகள். அதனால்தான் அவ்வப்போது மக்கள் ஆசையைத் தூண்டும் பொருள்களை உருவாக்கி வருகிறார்கள்.

மக்கள் தங்கள் ஆசைகளை முடிவுக்குக் கொண்டு வர மாட்டார்கள் என்பது தெரியும். அதனால்தான் சந்தைப்படுத்துதல் அதிகமாகிறது. அதனால் ஆசைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது பணம் உங்களுக்கு உதவினால் அப்போது நிச்சயம் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.