ரவி மோகன், ஆர்த்தி, கெனிஷா தகவல்கள் கடந்த சில மாதங்களாக மீடியாக்களுக்கு நல்ல தீனி போட்டன. எங்கு பார்த்தாலும் அவர்களைப் பற்றிய செய்திகள் தான் பரபரப்பாகி வந்தன. குடும்ப விஷயத்தை நாலு சுவருக்குள்தான் தீர்க்க வேண்டும்.
மற்றபடி அதை அரங்கிற்குக் கொண்டு வரக்கூடாது என்பதுதான் ஆரோக்கியமான விஷயம். ஆனால் அதை ரவிமோகன் கோட்டை விட்டுவிட்டார் என்றே சொல்லலாம். அதனால் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த அவருக்கு பல்வேறு நெருக்கடிகள், சோதனைகள் உண்டானதுதான் வேதனை.
ஆர்த்தி ரவியுடன் விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க இன்னொரு பக்கம் கெனிஷாவுடன் ஜாலியாக சுற்றி வருகிறார். ஜெயம் ரவியாக இருந்த தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். தற்போது சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர் தான் வில்லனாம்.
பராசக்தி படத்துக்குப் பிறகு ரவிமோகன் எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார்? விஜய்சேதுபதி மாதிரி தொடர்ந்து வில்லனா நடிக்க வாய்ப்பு இருக்கான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான்.
ரவிமோகன் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கிற திரைப்படம் ஜீனி. அதைத் தொடர்ந்து கராத்தே பாபு படத்தில் நடிக்கிறார். இப்போ ரவிமோகன் சொந்தமாக படம் தயாரிக்கிற முயற்சியில் உள்ளார். அந்தப் படத்தை இயக்குபவர் டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் யோகி. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.