ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் ஆண் பிள்ளைகளுக்கு அம்மா இருந்தது போல் இருக்காது. பெண் பிள்ளைகளுக்கு அப்பா இருந்தது போல் இருக்காது. ஒரு ஆண் பிள்ளைகளை அப்பா திட்டும் போது அம்மா தோள் மீது சாய்த்து கொள்வான். ஒரு பெண் பிள்ளைகளை அம்மா திட்டும் போது அப்பா தோள் மீது சாய்ந்து கொள்வாள்.
ஆண் பிள்ளைகள் மீது அப்பா அதிகம் பாசம் காட்ட மாட்டார். இதற்கடுத்தாலும் திட்டுவார் ஏனென்றால் நான் பட்ட கஷ்டம் நீயும் படக்கூடாது என்ற காரணத்திற் காக அப்பா அடிக்கடி திட்டுவார் அது நம்முடைய நன்மைக்கு தான் என்று புரியாமல் அப்பா மீது ஆண் பிள்ளைகளுக்கு பாசம் குறைவாக இருக்கும் ஆனால் அப்பா எப்போதும் பாசத்துடன் இருப்பார் மனதுக்குள் நீ நல்லா படிச்சு வாழ்க்கையில முன்னேறும்போது முதலில் ஆனந்தக் கண்ணீர் வடிப்பது உன்னுடைய அப்பாவாகத்தான் இருக்கும் ‘என் பிள்ளை ஜெயிச்சுட்டாடா’ என்பார்.
பெண் பிள்ளைகள் மீது அம்மா அதிகம் பாசம் காட்ட மாட்டார்கள்..அதற்காக பாசம் இல்லாமல் இல்லை அம்மாவும் அதிக பாசத்துடன் வளர்ப்பாள் இவ்வளவு பாசத்துடன் வளர்த்த பிள்ளை வேறொரு வீட்டுக்கு திருமணம் முடித்துப் போகும் போது அவளால் தாங்கிக் கொள்ள முடியாது..
அம்மாவுக்கு தான் நல்லது எது? கெட்டது எது ? என்று எல்லாம் தெரியும் அதனால் தான் அம்மா பெண் பிள்ளைகளை அதிகமாக கண்டிப்பாள். அது பெண் பிள்ளைகளுக்கு பிடிக்காமல் அப்பா மீது பாசத்தை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் 2 பிள்ளைகளுமே ஒன்றுதான்.