பெட்ரோல் பங்கில் மொபைல் போன் பயன்படுத்த தடை.. ஆனால் gpay மட்டும் பண்ணலாமா? முழு விளக்கம் இதோ!

Published:

பொதுவாக பெட்ரோல் பங்கில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பது நமக்கு தெரிந்தது. தற்போழுது ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி காரணமாக நாம் பெட்ரோல் பங்கிலும் மொபைல் போன் பயன்படுத்தி தான் பணம் செலுத்துகிறோம். இந்த முறை சரியா தவறா என்று நமக்கு குழப்பம் இருக்கும். அதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் விளக்கமாக பார்க்கலாம் வாங்க…

பொதுவாக மொபைல் போன் எல்லாம் குறைவான பவரில் தான் ரேடியோ அதிர்வலைகள் பயன்படுத்துகிறது என்பதால் அந்த பவர் அதிர்வலை ஒரு எலக்ரோ மக்னடிங் வேவ்னால் ஒரு நெருப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கான உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. மேலும் மொபைல் போனில் உள்ள பேட்டரியும் குறைவான வோல்டேஜில் தான் இயங்குகிறது என்பதால் அது பெட்ராலை பாதித்து தீ விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் குறைவுதான்.

அது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பிரச்சனை தரும் மொபைல்களில் மொபைல் பேட்டரி வெடிப்பதும் நாம் அன்றாட வாழ்க்கையில் பார்ப்பது உண்டு. இதிலிருந்து மொபைல் போன்களில் ஆபத்து குறைவு தான் ஆனாலும் அது முழுமையாக பாதுகாப்பானது என்பது ஏற்றுக்கொள்ள படவில்லை .

PETROLL

அப்புறம் எப்படி பெட்ரோல் பங்கிலும் மொபைல் போன் பயன்படுத்தி தான் பணம் செலுத்தி வருகிறோம் என்பது குழப்பம் இருக்கிறதா!.. விளக்கம் இதோ..

பெட்ரோல் பங்கிலும் மொபைல் போன் பயன்படுத்தி gpay பண்ணுவதற்கான அனுமதி குறித்த விளக்கம்.

2016 ஆம் ஆண்டுகளிலே petroliyam and explosive safty organization ( PESO) என்ற அமைப்பு நாம் பெட்ரோல் போடும் இடத்தில் இருந்து 6 மீட்டர் தொலைவில் மொபைல் போன் பயன்படுத்தலாம் எனவும், இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ஒரே மாதத்தில் 62 லட்சம் பயணிகள்: சென்னை மெட்ரோ ரயில் சாதனை!

இந்த முறையை பயன்படுத்தி தான் தற்பொழுது பெட்ரோல் பங்கில் gpay பண்ணுகிறோம். ஆனால் நிறைய பெட்ரோல் பங்கில் இந்த முறையை சரியாக பயன்படுத்துவது இல்லை.

மேலும் உங்களுக்காக...