இரண்டு இரட்டை சதங்களுடன் டிக்ளேர் செய்த ஆஸ்திரேலியா!

Published:

இன்று ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கிய நிலையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் 2 பேட்ஸ்மேன்கள் இரட்டை சதம் அடித்து சாதனை செய்துள்ளார்கள்..

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது என்பதும் இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 152 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 598 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து அணியின் லாபுசாஞ்சே 204 ரன்களும் ஸ்டீவன் ஸ்மித் 200 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ட்ராவிஸ் ஹெட் 99 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது இன்னிங்சை தொடங்கிய நிலையில் 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்துள்ளது என்பதை 524 ரன்கள் அந்த அணி தற்போது பின்னடைவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...