சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த நவம்பர் மாதம் 62 லட்சம் பேர் பயணம் செய்தது சாதனையாக கருதப்படுகிறது.
சென்னையில் மெட்ரோ ரயில் என்பது சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது என்பதும் ஒவ்வொரு மாதமும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதையும் கற்று வருகிறோம்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 25 லட்சம் பயணிகள் மட்டுமே சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த நிலையில் நவம்பர் மாதத்தில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதாவது 62 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் தான் மிக அதிக அளவில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிசம்பர் மாதத்தில் இதை விட அதிகமாக சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் சென்னை மெட்ரோவில் மட்டும் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முதலாம் கட்ட ரயில் பாதை சென்னை மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது என்பதும் அந்த ரயில் பாதை இயங்கத் தொடங்கியவுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.