அன்று சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர்.. இன்று அதே அணிக்கு பயிற்சியாளர்!

Published:

கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆக இருந்த விளையாட்டு வீரர் ஒருவர் தற்போது அதே அணிக்கு பயிற்சியாளராக மாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஐபிஎல் போட்டி ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் திருவிழா போன்று நடைபெற்று வருகிறது என்பதும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடத்த தற்போது ஐபிஎல் நிர்வாகம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிராவோஇந்த மாதம் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் போட்டிகள் நடைபெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டர் ஆக இருந்தவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பிராவோ என்பதும் அவர் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்வார் என்பதும் அதேபோல் பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்குவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார் இதனையடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...