அக்டோபர் மாத ராசி பலன்கள் 2023!

12 மாதங்களைக் கொண்ட ஆங்கில ஆண்டின் பத்தாவது மாதம்தான் அக்டோபர் மாதம். அக்டோபர் மாதத்தில் நவராத்திரி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆயுத பூஜை நாளில் நாம் தொழிலுக்குப் பயன்படுத்தும் ஆயுதங்களைச் சுத்தம் செய்து பட்டையிட்டு, படையலிட்டு ஆராதனை செய்வது வழக்கம். அதேபோல் சரஸ்வதி பூஜை நாளில் படிக்கும் புத்தகங்களை வைத்து கல்வியின் முதல் கடவுளான சரஸ்வதி தேவியை வழிபடுவது வழக்கம்.

நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படும் நவராத்திரி விரதமானது புரட்டாசி மாதத்தின் வளர்பிறைப் பிரதமை நாள் துவங்கி நவமி வரை என மொத்தம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் குறித்துப் பார்க்கலாம் வாங்க..

அக்டோபர் 1 ஆம் தேதி புதன் பகவான் கன்னி ராசிக்குப் பெயர்ந்து கன்னி ராசியில் இட அமர்வு செய்கிறார்.​​

அடுத்து அக்டோபர் 2 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்குப் பெயர்ந்து சிம்ம ராசியில் இட அமர்வு செய்கிறார்.​​

அக்டோபர் 3 ஆம் தேதி செவ்வாய் பகவான் துலாம் ராசிக்குப் பெயர்ந்து துலாம் ராசியில் இட அமர்வு செய்கிறார்.​​

அக்டோபர் 18 ஆம் தேதி சூர்ய பகவான் துலாம் ராசிக்குப் பெயர்ந்து துலாம் ராசியில் இட அமர்வு செய்கிறார்.​​

அக்டோபர் 19 ஆம் தேதி புதன் பகவான் துலாம் ராசிக்குப் பெயர்ந்து துலாம் ராசியில் இட அமர்வு செய்கிறார்.​​

மாத இரண்டாம் பாதியில் செவ்வாய் பகவான்- சூர்ய பகவான்- புதன் பகவான்- கேது பகவான் என அனைவரும் இணைந்து கூட்டாட்சி அமைக்கின்றனர்.

அக்டோபர் 30 ஆம் தேதி ராகு பகவான் மீன ராசிக்குப் பெயர்ந்து மீன ராசியில் இட அமர்வு செய்கிறார்.​​

அதே நாளான அக்டோபர் 30 ஆம் தேதி கேது பகவான் கன்னி ராசிக்குப் பெயர்ந்து மீன ராசியில் இட அமர்வு செய்கிறார்.​​

கிரகங்களின் பெயர்ச்சியால் அக்டோபர் மாதத்தில் 12 இராசிகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

ரிஷபம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

மிதுனம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

கடகம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

சிம்மம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

கன்னி அக்டோபர் மாத ராசி பலன் 2023!

துலாம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

தனுசு அக்டோபர் மாத ராசி பலன் 2023!

மகரம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

கும்பம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

மீனம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews