கடகம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

கடக ராசி அன்பர்களே! அக்டோபர் மாதத்தினைப் பொறுத்தவரை குரு பகவான் 10 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். சுக்கிர பகவான் 2 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார்.

குடும்ப வாழ்க்கை என்று பார்க்கையில் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவும்; மேலும் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் அதிக அளவில் நேரம் செலவழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பல ஆண்டுகளுக்குப் பின் பிரிந்த உறவினர்கள் மீண்டும் ஒன்று சேர்வர், சுக்கிரனின் இட அமைவு பொருளாதார ரீதியாக ஏற்றம் நிறைந்த மாதமாக இருக்கும்.

குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள், பல ஆண்டு கால கனவுப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாதம் முழுவதிலும் குடும்பம் சார்ந்த விஷயங்கள் ரீதியாக மகிழ்ச்சி நிறைந்தே காணப்படுவீர்கள்.

சனி பகவானால் ஏற்படவிருக்கும் மோசமான காரியங்களை சுக்கிர பகவான் தடுக்கின்றார்; சுக்கிர பகவானின் ஆதரவால் பெரிய அளவிலான சங்கடங்கள் எதுவும் ஏற்படாது.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இருக்கும் வேலையில் நிரந்தரமின்மையினை உணர்வீர்கள். மேலும் இருக்கும் வேலையினை விட்டு புது வேலைக்கு முயற்சி செய்யாதீர்கள்.

வேலை சார்ந்த இடங்களில் அளவான பேச்சு இருந்தால் மட்டுமே பல பெரும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். சக பணியாளர்கள் குறித்து புறம் கூறுதல், மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் என்பது போன்ற விஷயங்கள் கூடவே கூடாது.

புதன் பகவான் உச்சமடையும் மாதமாக அக்டோபர் மாதமாக இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் ஒவ்வொரு அடியினையும் எடுத்து வைத்தல் வேண்டும்.

காதலர்களைப் பொறுத்தவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழில்ரீதியாக மந்தநிலை காணப்படும், புது முதலீடுகள், கூட்டுத் தொழில் போன்ற விஷயங்களை அறவே தவிர்க்கவும்.

முடிந்தளவு நேர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுங்கள்; உங்கள் மனதினை நேர்மறையாக வைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருக்கும், மேலும் தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

முடிந்தளவு இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும்; வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் செல்லுதல் வேண்டும். மாணவர்கள் கல்வியில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews