மீனம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

மீன ராசி அன்பர்களே! மீன ராசியைப் பொறுத்தவரை புதன் பகவான் 7 ஆம் இடத்தில் உச்ச நிலையில் உள்ளார். புதன் பகவானின் உச்ச நிலையால் உங்களின் எதிர்காலம் குறித்த திட்டங்களைச் சிறப்பாகத் தீட்டலாம். ஆனால் தற்போதைக்கு செயல்படுத்த நினைக்கும் எந்தவொரு விஷயத்தையும் செய்ய முடியாது.

வீடு, மனை வாங்க நினைத்து இருப்பவர்களுக்கு காலம் கனிந்து வரும்; வீடு, மனை வாங்க அட்வான்ஸ் தொகையினைக் கொடுப்பீர்கள். மாணவர்கள் கல்வி ரீதியாக மந்தநிலையில் காணப்படுவர், மேலும் குழந்தைகளின் உடல் நலன் சார்ந்து சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

அபாயம் தரும் முதலீடுகள் எதையும் செய்யாதீர்கள்; ஓரளவு லாபத்தில் அபாயம் இல்லாத முதலீடுகளைச் செய்யுங்கள். குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் எந்தவொரு விஷயத்தினைச் செய்யும்போதும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.

உட்கார்ந்து பேசி மனம் ஒத்துவரும் விஷயத்தினைச் செய்யுங்கள். புகுந்த வீட்டார் சொத்து சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவர். திருமண காரியங்களைப் பொறுத்தவரை கைகூடும் நிலையில் இருந்த வரன்கள் தட்டிப் போகும். மேலும் எதிர்பார்த்த வரன் அமையாததால் மனவருத்தத்திற்கு ஆளாவீர்கள்.

அக்டோபர் மாதத்தில் திருமண காரியங்களை அப்படியே கிடப்பில் போடவும். மேலும் உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் தினசரியும் உடற் பயிற்சி, முறையான உணவுப் பழக்கத்தினை கடைபிடித்தல் என்று இருத்தல் வேண்டும்.

மிகச் சிறிய அளவிலாவது மருத்துவ சிகிச்சையினை செய்வீர்கள். மேலும் உடல் அளவில் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு, வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

தொழில்ரீதியாக வருமானம் ஓரளவு இருக்கும்; ஆனால் பெரிய அளவில் லாபகரமானதாக இருக்காது, கிடைக்கும் வருமானத்தை தொழிலிலேயே மீண்டும் போடுவீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

கூட்டுத் தொழில் செய்வோருக்கு பங்குதாரர்களால் பெரிய அளவில் நெருக்கடிகள் ஏற்படும், பொறுமையுடன் சிந்தித்து எந்தவொரு காரியத்தைச் செய்யவோ அல்லது பேசவோ செய்யுங்கள்.

வண்டி, வாகனங்கள் ரீதியாகச் செலவினங்கள் ஏற்படும், வீட்டில் உள்ள பொருட்கள் சார்ந்து அடிக்கடி பழுது பார்ப்பீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews