மிதுனம் வைகாசி மாத ராசி பலன் 2024!

மிதுன ராசி அன்பர்களே! வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை; அதிலும் வயதில் மூத்தோர்கள் உடலில் சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது நலம்.

கல்வி அல்லது வேலை சார்ந்து வெளிநாடு செல்ல முயற்சி செய்து வந்தவர்களுக்கு இது உகந்த காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு இருக்கும் தீராக் கடன்களை நீங்கள் உங்கள் தந்தை அல்லது உடன் பிறப்புகளின் உதவியோடு அடைப்பீர்கள்.

தொழில் வாழ்க்கை என்று கொண்டால் ஏற்கனவே செய்யும் தொழிலை அடுத்து புதியதாக வேறு ஒரு தொழிலைத் துவக்குவீர்கள். தனம், குடும்பம், வாக்குஸ்தானம் என்று சொல்லப்படுகின்ற 2 ஆம் இடத்தில் செவ்வாய் பகவானுடன் சுக்கிர பகவான் இணைந்து இட அமர்வு செய்துள்ளார்.

சுக்கிரன்- செவ்வாய் கூட்டணியால் நீங்கள் பேசும்போது காரசாரமாகவே பேசுவீர்கள்; இது குடும்ப உறுப்பினர்களைக் காயப்படுத்தும். உறவுகளை இழக்கும் நிலைக்குத் தள்ளும். சிறிது தேன் தடவிய வார்த்தைகளைப் பயன்படுத்துதல் நல்லது.

குடும்ப உறுப்பினர்கள் பயணங்கள் அடிக்கடி செய்வதுபோல் அமையப் பெறும். தனப்ராப்தம் மிகச் சிறப்பாக இருக்கும்; வருமானம் சிறப்பாக இருப்பதைப்போல் மற்றொருபுறம் செலவுகளும் ஏற்படும்.

வண்டி, வாகனங்கள் மாற்றுதல், வீடு சார்ந்து ஆடம்பரமான செலவுகள் செய்தல் என செலவுகள் அதிகம் ஏற்படும். நிறைய அனுகூலமான விஷயங்கள் நடைபெறும்.

மாணவர்கள் உயர்கல்வி சார்ந்து செய்யும் முயற்சிகள் நேர்மறையான முடிவுகளைக் கொடுப்பதாய் இருக்கும். மேலும் எதிர்பார்த்த கல்வி சார்ந்த கடனுதவிகள் எளிதில் கிடைக்கப் பெறும்.

மேலும் வீடு, மனை சார்ந்து அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். பொருளாதார ஏற்றம் என்று பார்க்கையில் 95% என்றே கொள்ளலாம். உங்களின் கையில் இருக்கும் பணமானது இரட்டிப்பாகும்.

ஏரிகாத்த ராமன் கோயில் வழிபாடு செய்வது வாழ்க்கையில் ஆகச் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துவதாய் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews