கன்னி அக்டோபர் மாத ராசி பலன் 2023!

கன்னி ராசி அன்பர்களே! அக்டோபர் மாதத்தினைப் பொறுத்தவரை புதன் பகவான் முதலாம் வீட்டில் உச்சம் அடைந்துள்ளார். புதன் பகவானின் இட அமைவு மிகவும் வலுவாக இருப்பதால் நீங்களும் வலுவாக இருப்பதாக உணர்வீர்கள்.

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். கன்னி ராசியில் புதன் பகவான் இட அமர்வு செய்து பத்ராயோகம் என்ற யோகத்தினைக் கொடுப்பார்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

எதிர்காலம் குறித்த திட்டங்களை வேலை, தொழில், குடும்ப வாழ்க்கை என அனைத்து விதங்களிலும் சிறப்பாகத் திட்டமிடுவீர்கள். அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான மாதத்தின் முதல் பாதியானது அனுகூலமான காலகட்டமாக இருக்கும். இரண்டாம் பாதியில் புதன் பகவான் துலாம் ராசிக்குள் அடியெடுத்து வைக்கிறார்.

புதன் பகவான் சூர்யன்- செவ்வாய்- கேது ஆகிய கிரகங்களுடன் இணைகின்றார். மாணவர்களைப் பொறுத்தவரை சிந்தித்தல், திட்டமிடுதல், செயல்படுத்துதல் என அனைத்துக் கோணங்களிலும் சிறப்பாகவே செயல்படுவர்.

அக்டோபர் இரண்டாம் பாதியில் திருமண காரியங்களைப் பொறுத்தவரை இழுபறி நீடிக்கும். ஆனால் பொறுத்திருந்து வரன் தேடினால் எதிர்பார்த்த வரன் அமையப் பெறும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வேலையானது கிடைக்கப் பெறும்; மேலும் வேலை சார்ந்த இடமாற்றங்களைச் செய்யலாம்.

அக்டோபர் முதல் பாதியில் தெளிவான திட்டமிடுதலுடன் எந்தவொரு காரியத்தையும் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். இரண்டாம் பாதியில் ஆலோசனை கேட்டுச் செயல்பட்டு காரியத்தில் வெற்றியினைக் காண்பீர்கள்.

தொழில்ரீதியாக பெரிய அளவில் கடன் வாங்காமல் சிறிய அளவிலான முதலீடுகளைச் செய்யலாம். கூட்டுத் தொழில் செய்யும் முன் பங்குதாரர்கள் குறித்து ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுதல் வேண்டும்.

தேவையற்ற பேச்சானது குடும்ப வாழ்க்கையிலும் சரி, தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களிலும் பலவிதமான எதிர்பாராத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

பலரும் தனிமையான வாழ்க்கையினை வாழ்வதாய் உணர்வீர்கள்; மனதளவில் உங்களுக்கு நீங்களே தன்னம்பிக்கை கொடுங்கள். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் மாத இரண்டாம் பாதியில் உணவு சார்ந்த விஷயங்களில் கூடுதல் அக்கறை தேவை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.