தனுசு அக்டோபர் மாத ராசி பலன் 2023!

தனுசு ராசி அன்பர்களே! தனுசு ராசியைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என கிரகங்களி இடப் பெயர்ச்சி கடந்த 10 மாதங்களில் ஆதாயப் பலன்களையே கொடுத்தது. அக்டோபர் மாதத்தினைப் பொறுத்தவரை 11 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான்- கேது பகவான் வீற்றிருக்க சூர்ய பகவானும்- புதன் பகவானும் இணைந்து மாதம் இரண்டாம் பாதியில் கூட்டணி அமைக்க உள்ளனர்.

சுக்கிர பகவான் 9 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார்; சனி பகவான் 3 ஆம் இடத்திலும், குரு பகவான் 5 ஆம் இடத்திலும் இட அமர்வு செய்துள்ளனர். பொருளாதார ரீதியாக எடுத்துக் கொண்டால் பண வரவு சிறப்பாகவே இருக்கும். மேலும் விபரீத ராஜயோகம் அடிக்கப் பெறும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

எடுத்த காரியங்களில் இடையூறு இல்லாமல் சிறப்பாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். முயற்சி செய்தால் போதும், வெற்றி உங்களைத் தேடி வரும். தொட்டது மட்டுமல்லாது தொடாததும் துலங்கும் மாதமாக இருக்கும்.

கேட்டது கிடைக்கும் மாதம் என்றும் சொல்லலாம், ஆதாயம் தரும் முதலீடுகளான வீடு, மனை சார்ந்த முதலீடுகளைச் செய்வீர்கள். இல்லத்தரசிகள் தங்க நகைகளை வாங்கி மகிழ்வார்கள். பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகளில் எதிர்த்தரப்பினர் சமாதானத்திற்கு வருவர்.

குடும்ப உறுப்பினர்களின் தேவையினைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களின் உயர் கல்வி ரீதியாகச் செலவினங்கள் ஏற்படும்; மேலும் அரசின் கல்வி சார்ந்த கடனுதவிகள் கிடைக்கப் பெறும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற விஷயங்களை எதிர்பார்க்கலாம். மேலும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையப் பெறும். புது வேலைக்கு முயற்சிப்போருக்கு நிச்சயம் கனவு வேலை கிடைக்கப் பெறும்.

தொழில்துறை என்று எடுத்துக் கொண்டால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்; அரசின் கடனுதவியுடன் தொழிலை மேம்படுத்தும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் அமையப் பெறும். மேலும் திருமண நிச்சயதார்த்தம், திருமண தேதி குறித்தல் என விறுவிறுவென அனைத்தும் நடந்து முடியும்.

தாய் – தந்தையின் உடலில் இருந்த நீண்ட நாள் தொந்தரவுகள் சரியாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews