மேஷம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

மேஷ ராசி அன்பர்களே! அக்டோபர் மாதத்தினைப் பொறுத்தவரை புதன் பகவான் உச்சம் அடைந்துள்ளார்; புதன் பகவானின் பார்வையால் மாணவர்கள் போட்டி சார்ந்த விஷயங்களில் வெற்றியினைப் பெறுவர். மேலும் மாணவர்கள் படிப்பில் மிகவும் ஆர்வத்துடன் காணப்படுவர். குழந்தைகளால் வீட்டிற்கு பெருமை வந்து சேரும்.

ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் 7 ஆம் இடத்தில் உள்ளார். சுக்கிரன் மிகவும் சிறப்பான இடத்தில் உள்ளார். ராகு பகவான் குரு பகவானுடன் இணைந்து முதல் இடத்தில் அமர்ந்துள்ளார்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

அக்டோபர் முதல் வாரம் உங்கள் மனதில் ஏதோ நெருடல் இருப்பதாய் உணர்வீர்கள்; வெற்றிகரமாக முடிந்துவிடும் என்று நினைத்த விஷயங்களும் நடக்காமல் போகும்.

குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடத்திலும் சரி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்தால் மட்டுமே ஏமாற்றம் எதுவும் இல்லாமல் இருக்க முடியும்.

செவ்வாய்- கேது பகவான் இணைவு உங்களை ஆன்மிக ரீதியிலான விஷயங்களில் ஈடுபடுத்தும்; உங்களை உணர்வதற்கும், நீங்கள் கொண்டிருக்கும் ஆற்றலை உணர்வதற்குமான காலமாக இருக்கும்.

புயலுக்குப் பின் அமைதி என்பதுபோல் அக்டோபர் மாத இறுதி உங்களுக்கு ஆதாயம் நிறைந்ததாக இருக்கும். வேலைவாய்ப்புரீதியாக எந்தவொரு மாற்றமும் செய்யாமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது.

தொழில்ரீதியாக முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். சூர்ய பகவான்- செவ்வாய் பகவான் கூட்டணியாக கேதுவுடன் இணைவதால் தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்தும் நபர்கள் உங்கள் வாழ்க்கையில் வருவார்கள்.

யாரிடமும் கோபம் கொள்ளாமல் நிதானத்துடன் இருந்தால் மட்டுமே பல பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை பெரிதளவில் வரன் எதுவும் அமையாது; அதையும் தாண்டி நடக்கும் திருமணங்களில் பல குளறுபடிகள், பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே இருக்கும்.

சுக்கிரனின் பார்வையால் அடிப்படைத் தேவைகள் எதிலும் குறைபாடுகள் எதுவும் இருக்காது;

உடல் நலன் என்று கொண்டால் தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். யோகா, தியானம் என உங்களைப் பல வழிகளிலும் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வீடு, மனை வாங்குதல், விற்றல் போன்ற விஷயங்களைத் தற்போதைக்குத் தள்ளி வைக்கவும். பூர்விகச் சொத்துகளில் தொடர்ந்து இழுபறி இருந்து கொண்டே இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews