துலாம் வைகாசி மாத ராசி பலன் 2024!

துலாம் ராசி அன்பர்களே வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை உடல் நலன் சார்ந்த விஷயத்தில் மிக மிக அக்கறை தேவை. சுக்கிரனுடைய வீட்டில் இருக்கக்கூடிய சூர்யனின் சஞ்சாரம் என்பதால் குறிப்பாக பெண்களின் உடல் நலனில் பிரச்சினைகள் ஏற்படும்.

உயர் அழுத்தம், நீரிழிவு நோய் கொண்டோர் மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஒரு சில பேருக்கு உடல் உஷ்ணத் தொந்தரவுகள் ஏற்படும்.

வண்டி, வாகனங்களில் வெளியே செல்லும்போது ஆவணங்களைச் சரியாக எடுத்துச் செல்லுதல் வேண்டும்; மேலும் அதில் எந்தக் குளறுபடியும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் கவனம் தேவை; குறிப்பாக தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. கடக ராசியான 10 ஆம் இடத்தில் செவ்வாய் பகவானும் சுக்கிர பகவானும் இணைந்து இருப்பதால் தொழில்ரீதியாக மிகச் சிறந்த முன்னேற்றத்தைப் பார்ப்பீர்கள்.

தொழில்சார்ந்து அபிவிருத்தி செய்தல், புதுத் தொழில் துவங்குதல், வாடிக்கையாளர்கள் அதிகரித்தல் என மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்கப் பெறும். துலாம் ராசி சார்ந்த பெண்களுக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை என்றாலும் தற்போது உங்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையானது கிடைக்கப் பெறும்.

மேலும் வெளிநாடு செல்ல கனவு கண்டவர்களுக்கு உங்களின் கனவு கைகூடும் காலமாக இது இருக்கும். எடுக்கும் முயற்சிகளைப் பிரமாண்டமாக செயல்படுத்தி அதில் வெற்றியும் காண்பீர்கள்.

பொருளாதாரம் என்று பார்க்கையில் வாங்கிய பழைய கடனை அடைப்பீர்கள். மேலும் குழந்தைகளுடன் வெளியூர் இன்பச் சுற்றுலா செல்வீர்கள். பண வரவு ஒருபுறம் சிறப்பாக இருந்தாலும், மற்றொருபுறம் செலவு கைமீறியதாகவே இருக்கும். மேலும் வீட்டில் உள்ள எலெக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்த்தல், வண்டி- வாகனங்களைப் பழுது பார்த்தல் என வீண் விரயச் செலவுகள் ஏற்படும்.

நீங்கள் லஷ்மி நரசிம்மரை வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் சகலவித நன்மைகளும் கிடைக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews