சிம்மம் வைகாசி மாத ராசி பலன் 2024!

சிம்ம ராசி அன்பர்களே வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை இதுவரையிலான காலகட்டத்தில் சூர்ய பகவான் 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்வு செய்து இருந்தநிலையில் தற்போது தன்னுடைய நட்சத்திரத்திலேயே இட அமர்வு செய்கிறார்.

சூர்ய பகவானின் இத்தகைய இட அமர்வு மாணவர்களுக்கு அனுகூலத்தினை ஏற்படுத்துவதாய் இருக்கும். உயர்கல்வி சார்ந்து நீங்கள் கண்ட கனவுகள் நனவாகும் என்பது உறுதி.

வேலைவாய்ப்பு என்று பார்க்கையில் அரசாங்க வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நீண்ட காலக் கனவு கொண்டு இருந்த உங்களுக்கு அரசாங்க வேலை தேடி வரும்.

12 ஆம் இடத்தில் செவ்வாய் பகவானுடன் சுக்கிர பகவான் கூட்டணி அமைத்து இட அமர்வு செய்துள்ளார். செவ்வாய்- சுக்கிரன் கூட்டணி குடும்ப வாழ்க்கையில் கஷ்டத்தினை ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே மூன்றாம் நபர்களால் அதிக அளவிலான பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் இந்த மாதத்தில் முன்னேப்போதைக் காட்டிலும் அதிக அலைச்சல் இருக்கவே செய்யும். வீடு, மனை சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்ய ஏற்ற காலகட்டமாக இது இருக்கும்.

தாயாரின் உடல் நலனில் சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருந்துகொண்டே இருக்கும். அதனால் அதிக அளவில் மருத்துவரீதியிலான செலவுகள் ஏற்படும்.

நினைத்த காரியங்களைச் சிறப்பாக நடத்தி அதில் வெற்றியும் காண்பீர்கள். தொழில் சார்ந்து அதிக அளவில் செலவுகள் ஏற்படும். முடிந்தளவு செலவுகளைச் செய்யும்முன் திட்டமிட்டு செலவு செய்வது நல்லது.

பொருளாதாரச் சேர்க்கை சிறப்பாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் வாங்கிய கடன்களை அடைப்பீர்கள்; அத்துடன் பொன், பொருள் போன்றவற்றில் எதிர்காலத் தேவைகளுக்காக முதலீடு செய்வீர்கள்.

நீங்கள் சிதம்பரம் நடராஜப் பெருமாளை தரிசித்து வந்தால் உங்களை நோக்கிவரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்துடன் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews