கும்பம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

கும்ப ராசி அன்பர்களே! கும்ப ராசியைப் பொறுத்தவரை சனி பகவான் வக்ர கதியில் உள்ளார், சுக்கிர பகவான் 8 ஆம் இடத்தில் உள்ளார். புதன் பகவானும் சூர்ய பகவானும் இணைந்து சனி பகவானுக்கு 8 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளனர்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பின்மையால் திண்டாடுவீர்கள். இருக்கும் வேலையினை விட்டு புது வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கும் பல தடுமாற்றங்கள் ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வேலை செய்யும் இடங்களில் சக பணியாளர்களுடன் இணக்கமின்மை, மேல் அதிகாரிகளின் ஆதரவின்மை என பல பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். ஆனால் இத்தகைய போராட்டங்களில் சுக்கிர பகவான் உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்.

தொழில் வாழ்க்கை என்று கொண்டால் புது முதலீடுகளைத் தவிர்த்து இருப்பதைக் கொண்டு தொழிலை நகர்த்துங்கள். வெளியூர்ப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் மற்றும் செலவினங்கள் ஏற்படும்.

பொருளாதாரரீதியாக எடுத்துக் கொண்டால் பணப் பற்றாக்குறை ஏற்படும்; வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மாணவர்கள் கல்விரீதியாக கவனச் சிதறலுடன் இருப்பர். பெற்றோர் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவர்களுக்கேற்ற அறிவுரைகளை வழங்குங்கள்.

வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் அமையாது. அதிலும் குறிப்பாக அக்டோபர் முதல் பாதியில் எந்தவொரு திருமணம் சார்ந்த காரியத்தினையும் செய்யாதீர்கள்.

தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. நீங்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிறு சிறு விஷயங்கள் நடக்கப் பெறும். குருவின் பலம் குறைவாக இருப்பதால் நினைத்த வேகத்தில் பலன் கிடைக்காது. ஆனால் காலம் தாழ்த்தினாலும் உங்கள் முயற்சிக்கேற்ற பலன் உங்களை வந்து சேரும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

அதிர்ஷ்டம் கைகொடுக்காவிட்டாலும், உங்களின் விடா முயற்சி உங்களுக்கு வெற்றியினைக் கொடுத்தே தீரும். உடன் பிறப்புகளுடன் மனக் கசப்பு ஏற்படும். தேவையற்ற பேச்சு சிறு சிறு பிரச்சினைகளையும் பெரும் பிளவுகளுக்கு காரணமாக்கி விடும்.

தந்தைவழி உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சரியாகி, அவர்கள் உங்களுடன் அன்பு பாராட்டுவார்கள். தந்தையின் உதவி பல இக்கட்டான நேரங்களில் உங்களுக்குக் கிடைக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews