சிம்மம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசி அன்பர்களே! அக்டோபர் மாதத்தினைப் பொறுத்தவரை இரண்டாம் பாதியில் சூர்ய பகவான் நீச்சம் அடைவார். மேலும் செவ்வாய் மற்றும் கேது பகவானுடன் இணைவார். புதன் பகவான் உச்சம் அடைவதுடன், செவ்வாய்- கேது- சூர்ய பகவானுடன் கூட்டணி அமைக்கவுள்ளார்.

அக்டோபர் முதல் பாதி அதாவது 1 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரையிலான காலகட்டமானது உங்களின் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் காலகட்டமாக இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

ஆனால் இரண்டாம் பாதியில் சூர்ய பகவான் நீச்சம் அடைந்து, பிற கிரகங்களான செவ்வாய்- கேது- புதன் ஆகிய கிரகங்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளதால் இரண்டாம் பாதி முழுமையும் மிகவும் மந்தநிலையிலேயே இருக்கும்.

புதிதாக எந்தவொரு காரியத்தினைச் செய்யத் திட்டமிடாதீர்கள், முடிந்தளவு திட்டங்களைத் தாமதப்படுத்துங்கள். தடங்கல்கள், தாமதங்கள், போராட்டங்கள் என பல வகையான நெருக்கடிகளையும் சந்திப்பீர்கள்; மனதளவில் துணிச்சலுடனும், தைரியத்துடனும் செயல்படுதல் அவசியம்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை முடிந்தளவு இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதலே நல்லது. வேலை செய்யும் இடத்தில் வேலைப் பளு அதிகரிக்கும்; மேல் அதிகாரிகளுடனான உறவில் சுமூகமின்மை ஏற்படும்.

அசாத்திய துணிச்சல் பல நேரங்களில் ஏற்படும்; ஆனால் பொறுமையுடன் நிதானித்துச் செயல்படுதலே நல்லது. கண்முடித்தனமாக அசாத்தியமாகச் செயல்பட்டால் அது பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் மனதளவிலும், உடல் அளவிலும் தளர்ந்து போவீர்கள். திடீர் சுற்றுலா மற்றும் திடீர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குரு பகவானின் பார்வையால் தானாக நடக்கும் சில நன்மைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் நடந்து கொண்டேதான் இருக்கும்.

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் மூன்றாம் நபர்களின் தலையீட்டால் கணவன்- மனைவி இடையே சண்டை ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

திருமண காரியங்களை அக்டோபர் முதல் பாதியில் செய்து முடியுங்கள், கிரக சேர்க்கை இரண்டாம் பாதியில் சிறப்பாக இல்லாததால் எந்தவொரு சுப காரியங்களையும் இரண்டாம் பாதியில் திட்டமிடாதீர்கள்.

குல தெய்வக் கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று படையலிட்டு கடவுளை தரிசித்துவிட்டு வாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews