மிதுனம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

மிதுன ராசி அன்பர்களே! அக்டோபர் மாதத்தினைப் பொறுத்தவரை புதன் பகவான் உச்சம் அடைந்துள்ளார், குரு பகவான் 11 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார்.

சுக்கிரன் 4 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். கிரகங்களின் இடப் பெயர்ச்சி மிதமான பலன்களைக் கொண்டதாக இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

அக்டோபர் மாதத்தின் முதல் பகுதியானது எந்தவொரு செயலைச் செய்யும்போதும் மிகவும் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். வேலைவாய்ப்பு என்று பார்க்கையில் பலரும் புது வேலைக்கு முயற்சித்தல், இருக்கும் வேலையில் மாற்றம் செய்தல் என்பது போன்ற விஷயங்களைச் செய்ய புதன் பகவான் தூண்டி விடுவார்.

செவ்வாய் 5 ஆம் இடத்தில் கேது பகவானுடன் இணைகிறார். அக்டோபர் இரண்டாம் பாதியில் செவ்வாய் பகவான்- கேது பகவான் கூட்டணியில் புதன் பகவானும் இணைகிறார். சூர்யன்- செவ்வாய்- கேது- சந்திரன்- புதன் எனப் பல கிரகங்கள் இணைந்து கூட்டணி அமைப்பதால் மனம் மிகவும் ஆர்வத்துடனும், வேகத்துடனும் செயல்படத் துவங்கும்.

ஆனால் படபடவென எந்தவொரு காரியத்தையும் செய்யாமல் சிறிது யோசித்து பின்னர் எந்தவொரு காரியத்தையும் செய்தல் வேண்டும். வேகத்தினை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு செயல்படாமல் விவேகத்தோடு செயல்படுதல் வேண்டும்.

குடும்ப வாழ்க்கை என்று பார்க்கையில் ராகு- கேதுவின் பார்வையால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன் கூடுதல், திருமண நிச்சயதார்த்த தேதி குறித்தல், திருமண தேதி குறித்தல் என விறுவிறுவென நடக்கும்; ஆனால் சிறிது காலம் பொறுத்து எதையும் செய்தால் பின்னால் வரவிருக்கும் பல குழப்பங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.

உடல் ஆரோக்கியம் என்று பார்த்தால் முதல் பாதியில் புத்துணர்ச்சியுடனும், மிகச் சிறந்த ஆற்றலுடனும் காணப்படுவர்.  இரண்டாம் பாதியில் செவ்வாய்- புதன்- கேது இணைவு உடல் ரீதியாக மந்தநிலையினை ஏற்படுத்தும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் கேது- புதன் இணைவு தவறான விஷயங்களைச் செயல்படுத்தத் தூண்டும், மாணவர்களைப் பொறுத்தவரை தெளிவற்ற சிந்தனையுடன் இருப்பர். மேலும் பல வகையான வழிகளிலும் கவனச் சிதறல் ஏற்படும்.

மேலும் உயர்கல்வி ரீதியான விஷயங்களாக இருந்தாலும் சரி, செய்யும் எந்தவொரு செயலிலும் குழப்ப நிலையுடனேயே இருப்பர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews