துலாம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

துலாம் ராசி அன்பர்களே! அக்டோபர் மாதத்தினைப் பொறுத்தவரை புதன் 12 ஆம் இடத்தில் உள்ளார். சுக்கிர பகவான் 11 ஆம் இடத்தில் உள்ளார். பல ஆதாயம் தரும் விஷயங்களும் உங்கள் வாழ்க்கையில் நடந்தேறும் மாதமாக அக்டோபர் மாதம் இருக்கும்.

செவ்வாய் பகவான் கேது பகவானுடன் 1 ஆம் இடத்தில் இணைந்துள்ளது. இந்த செவ்வாய்- கேது கூட்டணி உங்களுக்கு குடும்ப உறுப்பினர்கள்மீது கோபத்தினை ஏற்படுத்துவதாக இருக்கும். மேலும் உடன் பிறப்புகளுடன் எரிச்சல், சண்டை போன்றவை ஏற்படும்; இருப்பினும் வார்த்தை ப்ரயோகத்தில் கவனம் தேவை.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வீடு, வாழ்க்கை, குடும்பம் போன்ற விஷயங்களைத் தவிர்த்து வேலை, தொழில் என உங்களின் கவனத்தினைத் திசை திருப்புங்கள். மேலும் சேமிப்பு ரீதியாக அதிக கவனம் செலுத்துவீர்கள், மனை வாங்கும் முயற்சிரீதியாக அட்வான்ஸ் தொகையினைக் கொடுத்து இடத்தினை உறுதி செய்வீர்கள்.

கணவன் – மனைவி இடையேயான சிறு சிறு வாக்குவாதங்களும் பெரும் பிரச்சினையில் முடியும், புகுந்த வீட்டுக்காரர்கள் குடும்பத்தில் தேவையற்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்துவர். நாத்தனார்கள் சொத்துரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவர். அதீத கோபம் உங்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தேவையற்ற மன உளைச்சல்களோடு மாதத்தினைக் கடப்பீர்கள், முடிந்தளவு தியானம், யோகா என உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களின் சிறு சிறு தேவைகளைப் பூர்த்தி செய்ய செலவுகளைச் செய்வீர்கள்.

புது முயற்சிகள் எதையும் தயங்காமல் தைரியத்துடன் செய்து முடியுங்கள். மாணவர்கள் எதிர்காலம் குறித்த திட்டங்களைத் தீட்டலாம், உயர் கல்வி சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு வெற்றியினையே கொடுக்கும்.

எதை நீங்கள் செய்ய முயற்சிக்கும் போதும் சிறு சிறு தடைகள் இருந்து கொண்டே இருக்கும். குரு பகவானின் பார்வை துலாம் ராசியில் விழுவதால் ஏற்படும் பலவித தடைகள், தோஷங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

செவ்வாயுடனான மற்ற கோள்களின் இணைவு தேவையற்ற சிந்தனைகளை ஏற்படுத்துவதாக இருக்கும். எதிர்பார்ப்புகள் ஓரளவு சாத்தியமாக மாறும் மாதமாக அக்டோபர் மாதம் இருக்கும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தற்போதைக்கு எவ்வித பலன் அளிக்காவிட்டாலும் எதிர்காலத்தில் வெற்றியினைக் கொடுப்பதாய் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews