அதிமுகவுக்கு ஆதரவு தரும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து போய்விட்டதா? கொந்தளித்த கனிமொழி? கட்சியை நடத்த முடியாவிட்டால், என்னிடம் கொடுங்கள், கலைஞர் கனவை நான் நிறைவேற்றி காட்டுகிறேன்.. சபதம் இடுகிறாரா கனிமொழி? உதயநிதி தலைமையை ஏற்று கொள்ளாத சீனியர்கள் கனிமொழிக்கு ஆதரவா?

தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய தர்மசங்கடமான சூழலை திமுக சந்தித்து வருகிறது. குறிப்பாக, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுகவுடன் ஒரு ரகசிய உடன்பாடு அல்லது ஆதரவு குறித்த பேச்சுகள் அடிபடுவதை…

kanimozhi

தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய தர்மசங்கடமான சூழலை திமுக சந்தித்து வருகிறது. குறிப்பாக, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுகவுடன் ஒரு ரகசிய உடன்பாடு அல்லது ஆதரவு குறித்த பேச்சுகள் அடிபடுவதை கேட்டு, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி கடும் கொந்தளிப்பில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“ஆட்சியைத் தக்கவைக்க அல்லது அதிகாரத்திற்காக கொள்கை முரண் கொண்ட அதிமுகவின் தயவை நாடும் நிலைக்கு திமுக தரம் தாழ்ந்து போய்விட்டதா?” என அவர் தனது ஆதரவாளர்களிடம் ஆவேசமாக பேசியதாகத் தெரிகிறது. கலைஞரின் ரத்தமும், திராவிட கொள்கையும் ஊறிய ஒரு பேரியக்கம், இத்தகைய சமரசங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் அவர் மிக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக கூட தேர்ந்தெடுக்கப்படாத ஒரு சூழலில், கட்சியின் தலைமை பொறுப்பில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கனிமொழி தரப்பு கருதுகிறது. “கட்சியைச் சரியான முறையில் வழிநடத்தி செல்ல யாராலும் முடியவில்லை என்றால், அந்த பொறுப்பை என்னிடம் ஒப்படையுங்கள்; கலைஞரின் கனவுகளையும், அவர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தின் கௌரவத்தையும் நான் நிலைநாட்டி காட்டுகிறேன்” என அவர் ஒரு சபதமே இட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. டெல்லி அரசியலில் தனது முத்திரையை பதித்த தமக்கு, தமிழகத்தில் கட்சியை மீண்டும் எழுச்சி பெற செய்யும் வல்லமை இருப்பதாகவும், இனிமேலும் தான் ஒரு பார்வையாளராக இருக்க போவதில்லை என்றும் அவர் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

கனிமொழியின் இந்த அதிரடி மாற்றத்திற்கு பின்னால் திமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் ‘சீனியர்’ அமைச்சர்களின் ஆதரவு ரகசியமாக இருப்பதாக பேசப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினின் அசுர வளர்ச்சியையும், அவருக்கு கீழ் பணியாற்றுவதையும் விரும்பாத பல பழைய விசுவாசிகள், இப்போது கனிமொழியின் பக்கம் சாய்ந்து வருவதாக தெரிகிறது.

“கலைஞருடன் தோளோடு தோள் நின்று பணியாற்றிய எங்களுக்கு, கனிமொழியின் அணுகுமுறையும் தெளிவான பேச்சும் மிகுந்த நம்பிக்கையை தருகிறது” என இரண்டாம் கட்டத் தலைவர்கள் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர். இது திமுகவின் அதிகார மையத்தை உதயநிதியிடம் இருந்து கனிமொழியை நோக்கி திருப்பும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

அறிவாலயத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல், திமுக உடைய வாய்ப்புள்ளதா என்ற அச்சத்தை தொண்டர்கள் மத்தியில் விதைத்துள்ளது. ஸ்டாலின் தரப்பும் கனிமொழி தரப்பும் தங்களது பலத்தை காட்டத் துடிக்கும் வேளையில், கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரியும் அபாயம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கனிமொழிக்கு கிடைக்கும் வரவேற்பு, கட்சியின் தலைமை பீடத்தில் ஒரு மாற்றத்தை வலியுறுத்துவது போல அமைந்துள்ளது. உதயநிதியை விட கனிமொழிக்கு இருக்கும் அனுபவமும், சமூக ரீதியான செல்வாக்கும் அவருக்குப் கூடுதல் பலமாக மாறியுள்ளது.

தமிழகத்தின் 16-வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், திமுகவின் உள்விவகாரங்கள் அந்த பேரியக்கத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளன. “கலைஞர் குடும்பத்தின் வாரிசு நான் மட்டும் இல்லையா?” என்ற கனிமொழியின் கேள்வி, பல தசாப்தங்களாக திமுகவில் நிலவி வந்த வாரிசு அரசியல் கணக்குகளை மாற்றி போட்டுள்ளது. உதயநிதியின் தலைமையை ஏற்க தயங்கும் சீனியர்களும், கொள்கை பிடிப்புக் கொண்ட தொண்டர்களும் கனிமொழியின் பக்கம் திரண்டால், திமுகவில் ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது.