நீங்கள் எண்ணிய காரியம் உடனடியாக வெற்றி பெற வேண்டுமா? அப்படின்னா ஆஞ்சநேயரை இப்படி வழிபடுங்க…!

Published:

இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் முக்கியமான கதாபாத்திரமாக வருபவர் ஆஞ்சநேயர். இவரை வழிபட சனிக்கிழமை உகந்த நாள். இந்த நாளில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நல்ல பலனைத் தருவார். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

அனுமனை சனிக்கிழமை அன்று வழிபட்டால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிட்டும். குறிப்பாக சனியின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவதையும் நாம் பார்த்திருப்போம். இது ஏன்னு தெரியுமா? வாங்க… பார்க்கலாம்.

AANJANEYAR
AANJANEYAR

ராமனின் பக்தன், சஞ்சீவி மலையைத் தூக்கியவன், பஞ்ச பூதங்களை வென்றவன் என பல பெருமைகளை உடையவர் அனுமன். இவருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

ராவண வதத்திற்குப் பிறகு 2 அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை எப்படி சமாளிப்பது? என்று தேவர்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை வதம் செய்யக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்தபோது அனுமன் தான் அதற்கு தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அனுமனுக்கு போரில் உதவ ராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னும் பிற கடவுள்களும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை அளித்தார்கள்.

ராமர், தன்னுடைய அடுத்த அவதாரமான கிருஷ்ணனுக்குப் பிடித்த வெண்ணெயை அளித்து, இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும். அசுரர்களையும் அழித்து விடுவாய் என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

அதன்படி, அனுமன் வெண்ணெய் உருகுவதற்குள் 2 அசுரர்களையும் அழித்துவிட்டார். அதுபோல, நாம் அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால், நாம் சாற்றிய வெண்ணெய் உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பதே, இதன் உண்மைக் காரணம்.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில், அனந்த பத்மநாபன் சந்நிதி முன்புறம் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது தான் முக்கியமான வழிபாடு.

வெண்ணையின் சிறப்பு என்னன்னா எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை. அதனால் இந்த வெண்ணையை சாத்தி அனுமனை வழிபட்டு நாமும் நம்முடைய காரியங்களில் வெற்றி வாகை சூடுவோம். வாழ்க்கையில் வளம் பெறுவோம்.

ஆஞ்சநேயருக்கு அனுமன், ராமதூதன், அஞ்சனை மைந்தன் என்று பல பெயர்கள் உண்டு. அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்ற வேண்டுமா? அனுமனுக்கு வெண்ணை சாற்ற வேண்டுமா என குழம்பிக் கொள்ள வேண்டாம்.

இதற்கு இன்னொரு கதையும் உண்டு. அதையும் பார்த்து விடுவோம்.  அதேபோல ஆஞ்சநேயருக்கு வெற்றிமாலை சாற்றுவதும், வெண்ணைக்காப்பும் நடக்கிறது. இது ஏன்னு தெரியுமா?  அசோகவனத்திற்கு சீதாதேவியைப் பார்க்க வந்து போர் செய்த ஆஞ்சநேயரின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. அப்போது சீதாதேவி அவருக்கு வெண்ணையைத் தடவி உடலில் ஏற்பட்ட சூட்டைப் போக்குகிறார்.

Aanjaneyar vetrilai maalai
Aanjaneyar vetrilai maalai

அதேபோல போர் நடக்கும் முன் சீதாதேவியிடம் ஆஞ்சநேயர் ஆசி வாங்க வருகிறார். அப்போது சீதாதேவி அனுமனுக்கு ஆசி வழங்க மலர்கள் எதுவும் இல்லையே என்ன செய்வது என்று யோசிக்கிறார். உடனே அருகில் கொடியாகப் படர்ந்திருந்த வெற்றிலையைப் பறித்து மாலை செய்து கொடுக்கிறார் ஆஞ்சநேயர்.

அவரது சமயோசிதப் புத்தியைக் கண்டு மகிழ்ந்த சீதாதேவி அந்த வெற்றிலை மாலையை அவருக்கே போட்டு வெற்றி வாகை சூடி வருவாய் என ஆசிர்வதிக்கிறார். அதன் காரணமாகவே நாம் ஆஞ்சநேயருக்கு இந்த வெற்றிலை மாலையை சாற்றுகிறோம். தடைபட்ட காரியங்கள் விலகி நிறைவேற ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையை சாற்றியும், வெண்ணையை சாற்றியும் வழிபட்டு வருகிறோம்.

மேலும் உங்களுக்காக...