மழையால் ஒத்திவைக்கப்பட்டது ஐபிஎல் இறுதி போட்டி: இன்றாவது நடைபெறுமா?

Published:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக நேற்று போட்டி தொடங்க தாமதமான நிலையில் இறுதியில் இன்று நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோத இருந்தன. ஏழு மணிக்கு நேற்று டாஸ் போட முயன்ற போது திடீரென மழை பெய்தது. இதனை அடுத்து மழை நின்றவுடன் டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ipl final1q ஆனால் மழை மேலும் வலுத்து பெய்த காரணத்தினால் போட்டி ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டது. கடைசியாக 09.50 மணி வரை பொறுத்திருந்து பார்க்க நடுவர்கள் முடிவு செய்த நிலையில் 10:00 மணிக்கு மேலும் மழை பெய்ததால் வேறு வழியின்றி இறுதிப் போட்டியை இன்றைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இன்று டாஸ் போடப்பட்டு இறுதி போட்டி தொடங்கும் என்றும் ஒருவேளை இன்றும் மழை பெய்தால் 5 ஓவர்கள் போட்டி நடைபெற வேண்டும் என்றும் ஐந்து ஓவர் போட்டி நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டால் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

குஜராத் மாநில வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி இன்று அகமதாபாத்தில் மழை பெய்ய 10 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று 40 சதவீதம் வாய்ப்பு இருந்ததால் மழை பெய்தது என்றும் இன்று 10% மட்டுமே வாய்ப்பு உள்ளதால் மழை குறைவாகவே பெய்யும் என்று எனவே இன்று திட்டமிட்டபடி இறுதி போட்டி நடக்கும் மற்றும் கூறப்படுகிறது.

ipl final1நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மைதானம் முழுவதும் நிரம்பி இருந்தது. ஆனால் இன்று திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் நேற்றைய அளவுக்கு கூட்டம் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி என்பதால் போட்டியை பார்க்க நிச்சயம் பெரும்பாலான மக்கள் மைதானத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டியை நடத்த வருண பகவான் வழி விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஒன்றுமில்லை

மேலும் உங்களுக்காக...