அகமதாபாத் மைதானத்தில் மழை மேகம்.. ஆட்டம் நின்றால் குஜராத்துக்கு கப்பா?

Published:

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்றுடன் முடிவடையுள்ள நிலையில் இன்று அகமதாபாத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற உள்ளது. இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்த போட்டி தொடங்க இருக்கும் நிலையில் அகமதாபாத் மைதானத்தில் மழை மேகம் காணப்படுவதால் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை மழை வந்து ஆட்டம் நின்று போனால் போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்று வெளியாகி உள்ள தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நான்குமுறை சாம்பியன் பட்டம் என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் குஜராத் அணியை மோதுகின்றன

இன்று இரவு 7 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இதே மைதானத்தில் நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்திடம் தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பழிவாங்க சென்னை பிளே ஆப் சுற்றில் குஜராத்தை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சொந்த மைதானத்தில் குஜராத் விளையாட உள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை தந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும்பாலான ஆதரவு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

rain ground1

இந்த நிலையில் இன்று அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் ஒருவேளை மழை வந்து போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதே ரசிகர்கள் அனைவரும் கேள்வியாக உள்ளது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் நாள் என்று ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ரிசர்வ் நாள் ஒதுக்கப்படவில்லை என்பதால் இன்று போட்டி நடந்தாலும் நடக்காவிட்டாலும் முடிவுகளை தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஒருவேளை மழையால் போட்டி தாமதம் ஆனால் கூடுதல் நேரத்தில் போட்டியை முடிக்க வாய்ப்பு உள்ளது. கூடுதலாக இரண்டு மணி நேரம் போட்டியை நடத்த பிசிசிஐ ஒப்புக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஒரு இன்னிங்ஸ் முழுமையாக முடிவடைந்து இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது மழை பாதிக்கப்பட்டால் டக்வொர்த் லீவீஸ் முறையின் மூலம் முடிவு தீர்மானிக்கப்படும். ஒருவேளை இரவு 11 மணிக்கு மேல் மழை நின்றால் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக இறுதி போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஐந்து ஓவர்களும் சாத்தியமில்லை என்ற அளவுக்கு இருந்தால் சூப்பர் ஓவர் வைக்கப்படும் என்று குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சூப்பர் ஓவரும் வீசக்கூடிய அளவுக்கு மைதானம் இல்லை என்றால் லீக் போட்டிகளில் புள்ளி பட்டியலில் முதலிடம் இருக்கும் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று மழை பெய்து ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டால் குஜராத் அணிதான் சாம்பியன் ஆகும்.

அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் இன்றைய போட்டி நடைபெறுமா லட்சக்கணக்கான ரசிகர்களை இன்றைய போட்டி விருந்தளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நாம் சந்தேகித்தபடியே தற்போது அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்வதால் டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது.

மேலும் உங்களுக்காக...