இந்தியா அமைதி பேச்சுக்கு அழைத்தபோது நான் நீச்சலித்து கொண்டிருந்தேன்.. பாகிஸ்தான் பிரதமர்..!

  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் ஒரு பொது மே 10-ம் தேதி அதிகாலை இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் நூர் கான் விமானத் தளத்தையும் பாகிஸ்தானின் பிற இடங்களையும் தாக்கியதாக உறுதிப்படுத்தினார். ஆனால் பாகிஸ்தானை…

pak pm

 

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் ஒரு பொது மே 10-ம் தேதி அதிகாலை இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் நூர் கான் விமானத் தளத்தையும் பாகிஸ்தானின் பிற இடங்களையும் தாக்கியதாக உறுதிப்படுத்தினார். ஆனால் பாகிஸ்தானை சேர்ந்த பல சமூக ஊடக பயனாளர்கள் அந்நாட்டு பிரதமரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்தியா தன்னை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது நான் நீச்சல் குளத்தில் நீச்சலடித்து கொண்டிருந்தேன் என்று பேசியதை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் உரையாற்றிய பிரதமர் ஷரீஃப், மே 10 அதிகாலை 2:30 மணிக்கு தற்காப்புப் படைகளின் தளபதி ஜெனரல் ஆஸிம் முநீர் இந்திய ஏவுகணை தாக்குதல் குறித்து தனக்கு தகவல் வழங்கியதாக கூறினார்.

மேலும் இந்தியா தன்னிடம் அமைதி ஒப்பந்தம் குறித்த தகவலை கூறிய நேரத்தில் தான் ஜாலியாக நீச்சலடித்துக் கொண்டிருந்ததாக கூறினார். அது காலை நேரம். நான் நீச்சலடிக்கப் போனபோது பாதுகாப்பான தொலைபேசி என் அருகில் இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அழைப்பு வந்தது,” என அவர் கூறினார்.

ஜெனரல் ஆஸிம் முநீரின் அந்த அழைப்பில், நாம் இந்தியாவுக்கு வலுவான பதிலடி கொடுத்துள்ளோம். ஆனால் இப்போது அவர்கள் அமைதிக்காக முயற்சி செய்கின்றனர்” என்று கூறியதாக ஷரீஃப் தெரிவித்தார்.

“நீங்கள் எதிரியை வலிமையாக எதிர்த்தீர்கள் என்பதே பெருமை. இப்போது அவர்கள் அமைதிக்கே கோரிக்கை விடுக்கின்றனர் என நான் அவரிடம் தெரிவித்தேன்,” என்று ஷரீஃப் கூறினார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு காமெடி/கன்டென்ட் கிரியேட்டர் X வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில், “பாகிஸ்தான் மேல் குண்டுகள் விழுந்துக்கொண்டிருந்த போதும் நம் பிரதமர் நீச்சல் போட்டுக்கொண்டிருந்தாராம் எனக் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

மேலும் இது உண்மை என எப்படி நம்ப முடியும்? உங்கள் அடிப்படை அறிவை பயன்படுத்துங்கள் என பாகிஸ்தான் மக்களை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார்.