புதிய காதலரை தேர்ந்தெடுத்து விட்டாரா நடிகை சமந்தா…? மேலாளர் கொடுத்த விளக்கம்….

சமந்தா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ் தெலுங்கு மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. 2010 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்…

samantha

சமந்தா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ் தெலுங்கு மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. 2010 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. 2010 இல் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

2012 ஆம் ஆண்டு நான் ஈ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் சமந்தா. தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன் என முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமானார் சமந்தா. 2015 காலகட்டத்திற்கு பிறகு அவர் பெரிதாக தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. மாறாக தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் நடிப்பை தொடர்ந்து தற்போது தயாரிப்பில் இறங்கி இருக்கிறார் சமந்தா. டிரலாலா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி அதன் கீழ் சுபம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை சமந்தா மறுபடியும் காதலில் சிக்கி இருப்பதாக வதந்திகள் பரவி வந்தது. அதைப்பற்றி அவருடைய மேலாளர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிகை சமந்தா பாலிவுட் இயக்குனர் ராஜ் நிதி மோருவை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. இதற்கு சமந்தாவின் மேலாளர் விளக்கம் அளித்தது என்னவென்றால், சமந்தா அவர்களைப் பற்றி பரவும் காதல் வதந்திகள் எதுவுமே உண்மை கிடையாது. அவர் யாரையுமே காதலிக்கவில்லை. அவருடைய போக்கஸ் முழுவதும் சினிமாவில் தான் இருக்கிறது என்று பகிர்ந்திருக்கிறார்.