என்ன ஆச்சு UPI சேவைக்கு? திடீரென முடங்கியதால் நாடு முழுவதும் பெரும் குழப்பம்..!

  இந்தியாவில் UPI சேவைகள் திடீரென பெரும் தடையை இன்று சந்தித்து வருகிறது. இதனால் Paytm, PhonePe, Google Pay போன்ற பிரபல டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் சில மணி நேரங்களாக செயலிழந்தன என்றும்,…

upi

 

இந்தியாவில் UPI சேவைகள் திடீரென பெரும் தடையை இன்று சந்தித்து வருகிறது. இதனால் Paytm, PhonePe, Google Pay போன்ற பிரபல டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் சில மணி நேரங்களாக செயலிழந்தன என்றும், வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தவோ, பரிமாற்றமோ செய்ய முடியாமல் தவித்து வர்ருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சேவை சிக்கல்களை கண்காணிக்கும் DownDetector இணையதளத்தில், குறைகளை பதிவு செய்த பயனர்கள் எண்ணிக்கை காலை நேரத்திலேயே பல மடங்காக அதிகரித்தது.
இதுவரை மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், 66% பயனர்கள் பணம் செலுத்த முடியவில்லை எனக் கூறினர். 34% பயனர்கள் பரிமாற்றம் செய்ய முடியவில்லை என தெரிவித்தனர். இந்த சிக்கல் வங்கி கணக்குகள், செயலிகள் எல்லாவற்றையும் பாதித்ததால், UPI நெட்வொர்க் தானே காரணமா? என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த சிக்கலால் இன்று காலையில் அனுப்பப்பட்ட பணம் இதுவரை பலருக்கும் சென்றடையவில்லை ன்றும், அதிகபட்ச புகார்கள் காலை 11:41 மணி அளவில் பதிவானது அதாவது 220க்கும் மேற்பட்ட புகார்கள் ஒரே நேரத்தில் பதிவானதாகவும் தெரிகிறது. குறிப்பாக Paytm மற்றும் Google Pay பயனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் பலர் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு பயனர் தனது எக்ஸ் பக்கத்தில் “இன்னும் ஒரு நாள், இன்னும் ஒரு தடையா? எல்லா பெய்மென்டும் தோல்வியடைகிறது. திட்டமிட்ட பணிகள் என்றால், ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கலாமே? என்றார்.

UPIயை நிர்வகிக்கும் தேசிய பேமெண்ட் கழகம் (NPCI) இதுவரை எந்தவித விளக்கத்தையும் வழங்கவில்லை. இந்த தடையால் கடந்த ஒரு ஆண்டில் இது ஆறாவது பெரிய யூபிஐ தடை ஆகும். வாடிக்கையாளர்கள் இன்னும் நிலையான பதிலுக்காக காத்திருக்கின்றனர். NPCI அல்லது RBI இதுகுறித்து உடனே விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.