ஏப்ரல் 8ம் தேதி சிங்கப்பூரில் உள்ள ஒரு குடியிருப்பு, வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய குழந்தைகளையும் பெரியவர்களையும் தைரியமாக மீட்ட நான்கு இந்திய தொழிலாளர்களை, சிங்கப்பூர் அரசு நேற்று பாராட்டியது. மீட்புப் பணியில் காப்பாற்றப்பட்டவர்களில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்களான இந்தர்ஜித் சிங், சுப்பிரமணியன் சரண்ராஜ், நாகராஜன் அன்பரசன் மற்றும் சிவசாமி விஜயராஜ் ஆகிய நால்வரும் சிங்கப்பூர் அரசின் சிறப்பு விருதுகளை பெற்றனர்.
ஏப்ரல் 8 அன்று காலை, சிங்கப்பூரின் Newtonshow Camp கட்டிடத்தின் 3வது மாடியில் அமைந்திருந்த Tomato Cooking School பகுதியில் புகை மற்றும் சத்தங்களை கேட்டு இந்த நால்வரும் உடனே அருகிலிருந்த தங்கள் பணிமனையிலிருந்து விபத்து நடந்த பகுதிக்கு ஓடினர்.
வெளியே இருந்த படிக்கட்டிலில் சிக்கியிருந்த 10 குழந்தைகள் உட்பட பலரையும், மனித சங்கிலி அமைத்து பத்திரமாக கீழே இறக்கினர். இதில், பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் பவனோவிச் என்பவரும் இருந்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்ட சுப்பிரமணியன் சரண்ராஜ் என்பவர் கூறினார்:
“புகையால் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்ததும், நாங்கள் எங்கள் குழந்தைகள் போல் நினைத்து அவர்களை காப்பாற்றினோம் என்று நாகராஜன் அன்பரசன் என்பவர் கூறினார்:
இந்த தீ விபத்தில் 10 வயது ஆஸ்திரேலிய பெண் குழந்தை ஒருவர் மீட்கப்பட்டாலும் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த விபத்தில் மொத்தமாக 22 பேர் உயிரிழந்தனர், இதில் 16 குழந்தைகள் மற்றும் 6 பெரியவர்கள்
சிங்கப்பூர் சிவில் டிபென்ஸ் படை மேற்கொண்ட விசாரணையில், மூன்றாவது மாடியில் அனுமதி இல்லாத பிரிவுகள், பாதுகாப்பு மீறல், மற்றும் மறுவாடகைக்கு இடம் கொடுத்தது போன்ற காரணங்கள் தெரிய வந்தன. கட்டிடத்தின் முதல் மாடி மட்டும் குழந்தைகளுக்கான பயிற்சி மையமாக அனுமதிக்கப்பட்டிருந்தது. மற்ற மாடிகள் வசிப்பிடமாகவே பயன்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சிங்கப்பூர் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் உறுதியானால், கட்டிட உரிமையாளர்களுக்கு பெரும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.